images 60 - 2026

கனமழை சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு இருநாள் தடை!

சற்றுமுன்
images 60 - 2026

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் கனமழை எச்சரிக்கையால் 2 நாட்களுக்கு வனத்துறை கோயிலுக்கு செல்ல தடை விதித்து உள்ளது.வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் ஏமாற்ற மடைய வேண்டாம்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. தை மாத பவுர்ணமி வருகிற 5-ந் தேதியும், பிரதோஷத்தை முன்னிட்டும் நாளை பிப் 3-ந்தேதி முதல் 6-ந் தேதி வரை பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தது.

மலைப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் குளிக்கக்கூடாது, இரவில் கோவில் பகுதியில் தங்கக்கூடாது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த 2 நாட்களாக மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.

சில இடங்களில் சாரல் மழையும் பெய்துள்ளது. சதுரகிரி மலைப்பகுதியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதால் நாளை மழை பெய்யும் அறிகுறிகள் தென்பட்டால் பக்தர்கள் மலை ஏற தடை விதிக்கப்படும் என வனத்துறை அறிவித்திருந்தது.

தற்போது கனமழை எச்சரிக்கையால் 2 நாட்களுக்கு வனத்துறை சதுரகிரி கோயிலுக்கு செல்ல தடை விதித்து உள்ளது.சதுரகிரிக்கு வத்திராயிருப்பில் இருந்து தாணிப்பாறை சென்று அங்கிருந்து வானவழிப் பாதையில் ஏழு கி.மீ‌ தூரம் ஆறுகள் மலைகளில் நடந்தே செல்லவேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.