
மதுரை ஜெய்ஹிந்த்புரம் டாஸ்மார்க் சூப்பர்வைசர் மீது தாக்குதல்; பார் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது!
மதுரை: ஜெய்ஹிந்த் புரத்தில் டாஸ்மார்க் சூப்பர்வைசரை தாக்கிய பார் உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை வில்லாபுரம் அன்பு நகர் குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரவி 46 இவர் டாஸ்மார்க் கடையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார் நேற்று ஜெய்ஹிந்த்புரம் சோலை அழகுபுரம் மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு நின்றபோது அந்த கடையில் பார் நடத்தும் மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த ரவி 44 என்பவர் பணம் கேட்டுள்ளார் இதற்கு சூப்பர்வைசர் மறுத்ததால் ஆத்திரமடைந்த ரவி, சோலையழகுபுரத்தை சேர்ந்த சிதம்பரம், யோகேஷ் 20 மற்றும் தினேஷ்குமார் 23 ஆகியோர் தாக்கியுள்ளனர் .
இந்த சம்பவம் தொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவி ,யோகேஷ், தினேஷ் குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பார் உரிமையாளர் ரவி கொடுத்த புகாரின் பேரில் சூப்பர்வைசர் உள்பட 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கீரை துறையில் வேலை செய்து கொண்டு இருந்த போது மயங்கி விழுந்த எலக்ட்ரிஷன் உயிரிழப்பு!
மதுரை கீரை துறையில் வேலை செய்து கொண்டிருந்த எலக்ட்ரிஷன் மயங்கி விழுந்து பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீரைத்துறை இருளப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கமாரி 35 இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார் அதே பகுதியில் புது நல்லமுத்து பிள்ளை ரோட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென்று மயங்கி விழுந்து விட்டார் அவரை உடனடியாக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் செல்லும் வழியிலேயே தங்கமாரி பரிதாபமாக உயிர் இழந்தார் இதுகுறித்து மனைவி காளீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் கீரைத்துறைபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை தெப்பக்குளம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது!
மதுரை தெப்பக்குளம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை புது ராமநாடு ரோடு வை சேர்ந்தவர் உலகநாதன் 40 இவர்தெப்பகுளம் பகுதியில் நடந்து சென்றபோது கத்திமுனையில் அவரை வழிமறித்து அவரிடம் இருந்து ரூபாய் முன்னூரை வாலிபர்கள் பறித்து சென்று விட்டனர் .இந்த சம்பவம் தொடர்பாக உலகநாதன் தெப்பகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அனுப்பானடி மெயின் ரோடுவைசேர்ந்த ஜோதிபாசு மகன் ரவிக்குமார் 27 ,ஐராவதநல்லூர் மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துக்குமார் என்ற இட்லி முத்துக்குமார் 27 ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மதுரையில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகை திருட்டு மர்ம ஆசாமிகள் கைவரிசை!
மதுரை: பட்டப்பகலில் வீடு புகுந்து நகைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை நன்மை தருவார் கோவில் தெருவில் வசிப்பவர் துக்காராம் 35 இவர் வீட்டில் பட்டப்பகலில் வீடு புகுந்து வீட்டில் வைத்திருந்த 4 கிலோ வெள்ளி, முக்கால் பவுன் நகை இவற்றின் மதிப்பு ஒரு லட்சத்து 12 ஆயிரம் ஆகும்.இந்த பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக துக்காராம் திடீர் நகர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
கீரைத்துறையில் கஞ்சா மற்றும் பைக்குகள் பறிமுதல் 4 பேர் கைது!
மதுரை: கீரைத்துறையில் கஞ்சா மற்றும் பைக்குகளை பறிமுதல் செய்து நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
கீரைத்துறை சிந்தாமணி ரோடு பாம்பன் ரோடு சந்திப்பில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது கீரைத்துறை சப்-இன்ஸ்பெக்டர் துரைபாண்டி தலைமையில் சென்ற போலீசார் அந்த பகுதியில் விற்பனை செய்த கீரை துறையைச் சேர்ந்த காளீஸ்வரன் 29 ராமகிருஷ்ணன் என்ற அனல் ராமர் 36 மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த குமாரவேல்25 அதே பகுதியை சேர்ந்த குமாரவேல் 43 ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவையும்அவர்கள். பயன்படுத்திய இரண்டுஇரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.