
சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. குறிப்பாக விலங்குகளின் குறும்பு வீடியோக்கள், விலங்குகள் சண்டையிடும் வீடியோக்கள் வேகமாக பரவுகின்றன. அந்த வகையில் தற்போது, இரண்டு புலிகள் சண்டையிட்டு கொள்ளும் காட்சி இணையத்தில் பரவி வருகிறது.
அந்த வைரல் வீடியோவில் ஒரு காட்டிற்குள் இரண்டு புலிகள் பொறுமையாக நடந்து வருகின்றன. ஜீப்பில் உள்ள சுற்றுலா பயணிகள் அதனை வீடியோவாக எடுக்கிறார். ஒருகட்டத்தில் ஒரு புலி மற்றொரு புலியை தாக்க வருகிறது. பதிலும் அந்த புலியும் சண்டையிடுகிறது. இரண்டு புலிகளும் தொடர்ந்து சண்டையிட்டு வரும், நிலையில், முதலில் தாக்க வந்த புலி கீழே விழுந்து விடுகிறது..
மற்றொரு புலி ஒன்றும் ஆகாதது போல கூலாக நடந்து செல்கிறது..
இந்த வீடியோவை வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவர் தனது பதிவில் ” ஜாம்பவான்களின் மோதல். இந்தியாவில் இருந்து மட்டுமே. நீங்கள் பார்க்க வேண்டியள் சிறந்த விஷயம். இது வாட்ஸ்அப் வழியாக பெறப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ 87,000-க்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
Clash of the titans. Only from India. Best thing you will watch. Received via whatsapp. pic.twitter.com/36qqvhkG5F
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) January 19, 2021