December 5, 2025, 9:05 PM
26.6 C
Chennai

மாணவன் தற்கொலை! ஆசிரியர் கூற்றா.. காதலின் தெற்றா?

sanjay-kumar
sanjay-kumar

அரும்பாக்கம் வினாயகபுரம் தெருவை சேர்ந்த சஞ்சய் குமார்(15). மதுரவாயலில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தான். நேற்று வீட்டில் இருந்து மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றான். மதியம் 12 மணிக்கு வீட்டிற்கு வந்த சஞ்சய் குமார் தனது அறைக்கு சென்றான். ஆனால் வெகு நேரமாக அறையில் இருந்து வெளியே சஞ்சய் குமார் வராததால் சந்தேகமடைந்த அவனது தந்தை மாதவன் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, சஞ்சய் குமார் புடவையால் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தகவலின்பேரில் சூளைமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சஞ்சய் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சஞ்சய் குமார் அதிகளவில் தலையில் முடி வளர்த்து இருந்தான். அந்த முடியுடன் தான் பள்ளிக்கு சென்றுள்ளான். அப்போது பள்ளி ஆசிரியர் ஒருவர் சஞ்சய் குமாரிடம், ‘தலை முடி அதிகளவில் இருக்கிறது. நீ தலைமுடியை வெட்டி கொண்டு பள்ளிக்கு வா’ என்று கூறி மாணவனை வீட்டிற்கு திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

சக மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் கூறியதால் மனமுடைந்த சஞ்சய் குமார் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் மாணவன் தற்கொலை குறித்து தனியார் பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவனை திருப்பி அனுப்பிய ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேநேரம், உடன் பள்ளியில் படிக்கும் அவனது நண்பர்கள், சஞ்சய் குமார் பள்ளியில் படிக்கும் சக மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளதாகவும், தனது காதலை மாணவி ஏற்றுக்கொள்ளாததால் தற்கொலை முடிவுக்கு வந்து இருக்க கூடும் என்றும் போலீசாரிடம் தெரிவித்தனர். இதனால் போலீசார் தற்கொலை செய்து கொண்ட மாணவன் பயன்படுத்திய செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 COMMENT

  1. 12aam vaguppu padikkum manavannukku eppadi 15 vayadhaagum,andha manavanin vayadhu 18 avnukku vangiyil ATM card ullathu.appo epdi 15 vayadhu irukkum,visaranai mulumaiyaaga nadandhadha?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories