IMG 20230208 WA0064 - 2026

நெல்லின் ஈரப்பதம் மத்தியக்குழு நாகை மாவட்டத்தில் ஆய்வு

தமிழகம்
IMG 20230208 WA0064 - 2026

 காவிரி படுகையில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய வந்துள்ள மத்தியக் குழுவினர் நாகை மாவட்டம்,வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு நெல் கொள்முதல் நிலையத்தில் இன்று ஆய்வு செய்தனர்

தலைஞாயிறு அக்ரஹாரம், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு இன்று காலை மத்திய குழுவினர் வருகை தந்தனர்.

 நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 3 விவசாயிகளின் நெல் மூட்டைகளில் நெல் மணிகளை எடுத்து ஈரப்பதத்தினை ஆய்வு செய்தனர்.

 சுமார் 10 நிமிடங்கள் நடைபெற்ற ஆய்வுக்கு பிறகு அந்த குழு அடுத்த ஆய்வு மையமான கச்சநகரம் புறப்பட்டுச் சென்றது.

மத்திய குழுவில் இடம் பெற்றுள்ள சென்னையில் உள்ள தொழில்நுட்ப தரக் கட்டுப்பாட்டுக் குழு அதிகாரிகள் சி.யூனுஸ், பிரபாகரன்,இதேதுறையின் பெங்களூர் அதிகாரி,ஒய்.போயா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

 இந்த ஆய்வின்போது, நாகை மாவட்ட ஆட்சியர் அ.அருண் தம்புராஜ், வேளாண் இணை இயக்குநர் அகண்டராவ் உள்ளிட்டோர் இருந்தனர்.

படம் தலைஞாயிறு அக்ரஹாரம், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செத மத்திய குழுவினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.