ஆவின் பால் பாக்கெட்டை திறந்தா.. இறந்த தவளை! அதிர்ச்சியில் மக்கள்!

சற்றுமுன் தமிழகம்
aavin milk
aavin milk

மக்களுடைய அன்றாட தேவைகளில் ஒன்றாக பாலும் இருக்கிறது. இந்த பாலின் மூலம் தேவையான சில சத்துக்கள் கிடைக்கிறது.

கடைகளில் வாங்கும் பால் பாக்கெட்டுகளை விட நேரடியாக மாடுகளிலிருந்து கறக்கப்படும் பால் சத்து நிறைந்ததாகவும், தூய்மையானதாகவும் இருக்கிறது. அப்படி கிடைக்காதவர்கள் பால் பாக்கெட்டுகளை வாங்குகிறார்கள்.

இப்படி இருக்கையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் ஆவின் பால் பாக்கெட்டுகள் தவளை ஒன்று இறந்து கிடந்ததுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவனேசன் என்வருடைய வீட்டில் ஆவின் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அப்போது அந்த பால் பாக்கெட்டுக்குள் தவளை ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்து அந்த நிறுவனத்திற்கு புகார் கொடுத்துள்ளனர்.

இது தொடர்பாக ஆவின் விற்பனை பிரிவு மண்டல மேலாளர் விசாரணைக்கு கொண்டு வருகிறார். இதுஆவின்பால் வாங்கும்வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.