October 13, 2024, 1:07 PM
32.1 C
Chennai

பயணிகள் கவனத்திற்கு…. நாளை முதல் ரயில் போக்குவரத்தில் மாற்றம்!

railway news

மதுரை ரயில்வே கோட்டத்தில் கூடல்நகர்- சமயநல்லூர், மதுரை – கூடல்நகர், மதுரை – திண்டுக்கல் தடத்தில் பொறியியல் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளன. இதையொட்டி, செப். 18-ஆம் தேதி முதல் அக். 8-ஆம் தேதி வரை இத்தடத்திலான ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன் விவரம் :

பகுதியாக ரத்து…

ஈரோட்டிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் ஈரோடு- செங்கோட்டை விரைவு ரயில் (16845) செப். 18-ஆம் தேதி முதல் அக். 7-ஆம் தேதி வரை (செப். 24, அக். 1 தவிர) திண்டுக்கல்லில் நிறுத்தப்படும். திண்டுக்கல் – செங்கோட்டை சேவை ரத்து செய்யப்பட்டிருக்கும்.

மறுமார்க்கத்தில், செங்கோட்டையிலிருந்து காலை 5 மணிக்குப் புறப்படும் செங்கோட்டை – ஈரோடு விரைவு ரயில் (16846) செப். 19-ஆம் தேதி முதல் அக். 8-ஆம் தேதி வரை (செப். 25, அக். 2 தவிர) திண்டுக்கல்லிலிருந்து காலை 11.15 மணிக்கு புறப்பட்டு, ஈரோடு செல்லும்.

ALSO READ:  ஒரே அக்கவுன்டில் 2 பேர் UPI பயன்படுத்தலாம்; விரைவில் அறிமுகமாகிறது!

மாற்றுப் பாதையில்…

செங்கோட்டையிலிருந்து காலை 7.05 மணிக்குப் புறப்படும் செங்கோட்டை- மயிலாடுதுறை பயணிகள் விரைவு ரயில் (16848) செப். 19 முதல் அக். 7 வரை (செப். 25, அக். 2 தவிர) கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி மணப்பாறை வழியே செல்வதற்கு பதிலாக, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியே இயக்கப்படும்.

குருவாயூரிருந்து இரவு 11.15 மணிக்குப் புறப்படும் குருவாயூர் – சென்னை விரைவு ரயில் (16128) செப். 23, 25, 26, 27, அக். 2, 3 ஆகிய தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியே இயக்கப்படும்.

நாகர்கோவிலிருந்து காலை 6.15 மணிக்குப் புறப்படும் நாகர்கோவில்- மும்பை விரைவு ரயில் (16352) செப். 26, அக். 3 ஆகிய தேதிகளிலும், கன்னியாகுமரியிலிருந்து காலை 5.50 மணிக்குப் புறப்படும் கன்னியாகுமரி- ஹௌரா அதிவிரைவு ரயில் (12666) செப். 28-ஆம் தேதியும் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி,திருச்சி வழியே இயக்கப்படும்.

நாகர்கோவிலிலிருந்து காலை 9.15 மணிக்குப் புறப்படும் நாகர்கோவில் – கச்சேகுடா விரைவு ரயில் (16354) செப். 28-ஆம் தேதி திண்டுக்கல், கரூர் வழியே இயக்கப்படும். மதுரையிலிருந்து காலை 11.55 மணிக்குப் புறப்படும் மதுரை- பிகானர் விரைவு ரயில் (22631) செப். 26, அக். 3 ஆகிய தேதிகளில் மதுரை, மானாமதுரை, காரைக்குடி வழியே இயக்கப்படும்.

ALSO READ:  ஆன்லைன் ரம்மியால் மேலாளர் தற்கொலை: தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்!
author avatar
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

செங்கோட்டையில் நவராத்திரி திருவிழா முப்புடாதி அம்மன் திருவீதி உலா.

செங்கோட்டையில் நவராத்திரி திருவிழா முப்புடாதி அம்மன் திருவீதி உலா. செங்கோட்டை ஆரியநல்லுார் தெரு...

பஞ்சாங்கம் அக்.13 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம்: அக்.13ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம||श्री:|| !!श्रीरामजयम!! ஸ்ரீராமஜெயம்!!ஸ்ரீ:!!श्री:श्रीमते...

திருச்செந்தூர் – திருநெல்வேலி ரயில் ரத்து!

திருச்செந்தூர் - திருநெல்வேலி ரயில் அக்.15 முதல் நவ.22ஆம் தேதி வரை (தீபாவளி நாள் தவிர்த்து) ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் களைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம்!

கல்விக் கடவுளான சரஸ்வதி தேவிக்கு, சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இந்துக்களின் முக்கிய விழாக்களில் நவராத்திரி விழாவும் ஒன்று.