rajapalayam rain - 2026

ராஜபாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் திடீர் மழை!

மதுரை சற்றுமுன் நெல்லை
rajapalayam rain - 2026

ராஜபாளையம் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், நேற்று இரவு சுமார் அரை மணி நேரம் பரவலாக பலத்த மழை பெய்தது.

கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் சற்று கடுமையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 4 நாட்கள் பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், நேற்று வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்தாலும் வழக்கத்தை விட புழுக்கத்துடன் கூடிய வெட்கை சற்று அதிகமாகவே இருந்தது. மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீசி வந்த நிலையில், இரவு நேரத்தில் ராஜபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள சொக்கநாதன்புத்தூர், சேத்தூர், முகவூர், தளவாய்புரம், தேவதானம், கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் பரவலாக பலத்த மழை பெய்தது.

இதனால் காலை முழுவதும் இருந்து வந்த வெட்கையான சூழ்நிலை சற்று மாறியது. கோடை காலத்தில் பெய்த மழையால் இந்தப்பகுதி மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.