சென்னை: மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
செப்டம்பர் 30ஆம் தேதி வரை குமரி கடல், தென் மாவட்ட கடல் பகுதியில் மணிக்கு 45 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும், வடகிழக்குப் பருவ மழை வழக்கத்தை விட 12% அதிகமாக இருக்கும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.




