images 2023 04 27T072432693 - 2026

விருதுநகர் அருகே16.5 டன் ரேசன் அரிசி பறிமுதல்..

சற்றுமுன்
images 2023 04 27T072432693 - 2026
#image_title

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே
16.5 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்து
3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

வெம்பக்கோட்டை பகுதிகளில் ரேசன் அரிசி கடத்தப்பட்டு வருவதாக குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் ஆலங்குளம், சுண்டகுளம் ஆகிய பகுதிகளில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது, அவ்வழியே வந்த இரு சரக்கு வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டதில், 1650 கிலோ ரேசன் அரிசி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, வாகனங்களில் வந்த திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியைச்சேர்ந்த முத்து என்ற பேச்சிமுத்து, கூசாலிபட்டியைச் சேர்ந்த கிறிஸ்டியன்பாலா(22), பாஸ்டின்(34) ஆகியோரைக் கைது செய்தனர். மேலும், கோவில்பட்டியைச் சேர்ந்த பூல்பாண்டியன்(35), விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த பசும்பொன் என்ற ரமேஷ் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.