petrol diesel price1 - 2026

பெட்ரோல், டீசல் விலை; ரூ.10 குறைக்க மத்திய அரசு ஆலோசனை!

இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள் வணிகம்
petrol diesel price1 - 2026

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொள்கிறது. லிட்டருக்கு ரூ.10 வரை குறைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

கடந்த 2022ம் ஆண்டு மே 22ம் தேதி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85ல் இருந்து ரூ.102.63ஆக குறைக்கப்பட்டது. தில்லியில் ரூ.96.72, மும்பையில் ரூ.111.35 என குறைக்கப்பட்டது. பிறகு இன்று வரை பெட்ரோல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்யவில்லை.

கடந்த 2022 மே 22ஆம் தேதி சென்னையில் டீசல் ரூ.94.24 ஆக குறைக்கப்பட்டது. தில்லியில் ரூ.89.62, கொல்கத்தாவில் ரூ.92.76 என இருந்தது. பிறகு இன்றுடன் 588வது நாளாக டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்த நிலையில், மக்களவை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

புத்தாண்டுப் பரிசாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பு அறிவிப்பை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பெட்ரோலிய அமைச்சகமும், நிதியமைச்சகமும் சமீபத்தில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தின. இதில் எவ்வளவு விலை குறைக்கலாம் என்பது குறித்த பரிந்துரையை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்பாக மாதத்துக்கு இரண்டு முறை இந்த இரண்டு அமைச்சகங்களும் ஆலோசனை நடத்தி வந்துள்ளன. கடந்த 3 மாதங்களாக இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விலை பேரல் 70 டாலர் முதல் 80 டாலருக்குள் உள்ளது. இதனால் விலை குறைப்பு குறித்து முடிவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது, என்றனர்.

சர்வதேச சந்தையில் பிரண்ட் கச்சா எண்ணெய் ஸ்பாட் விலை, மாத சராசரியாக கடந்த 2022 ஏப்ரல் மாதம் 109.34 டாலராக இருந்தது. பின்னர் மே மாதம் 122.84 டாலராக அதிகரித்தது. ஆனால், ஜூன் மாதத்தில் 110.1 டாலர்., எனவும், ஆகஸ்ட்டில் 96.49 டாலர், செப்டம்பரில் 87.96 டாலர் என தொடர்ந்து சரிவை சந்தித்தது. இந்த ஆண்டு துவக்கத்தில் கூட மார்ச் மாதம் 79.77 டாலராக இருந்த பிரண்ட் கச்சா எண்ணெய் ஸ்பாட் விலை, ஜூலை, செப்டம்பரில் 95.31 டாலராக உயர்ந்தது. இந்த மாத சராசரி ஸ்பாட் விலை 77.35 டாலராக உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.