சென்னை: சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், மிரட்டல் தொனியில் பத்திரிகையாளர்களிடம் பேசியதாகக் குற்றச் சாட்டு எழுந்தது. இதை அடுத்து பத்திரிகையாளர் சங்கங்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதின.
இந்நிலையில், தான் யார் மனதையும் புண்படுத்தும் எண்ணத்தில் இல்லை என்றும், அவ்வாறு இருப்பதாகக் கருதினால் அதற்காக வருத்தப் படுவதாகவும் தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
அவரது டிவிட்டர் பதிவு:
விமானநிலையத்தில் நேற்று அளித்த பேட்டியின் போது நான் மிரட்டல் தொனியில்,ஒருமையில் பேசியதாக சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை, அப்படி எந்த பத்திரிக்கை அன்பர்களின் மனதாவது புண்பட்டுருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன்.

— Rajinikanth (@rajinikanth) May 31, 2018