மலேசியா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் மஹாதிர் முகமதுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். முன்னதாக அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்ததற்காக அவர் மலேசிய பிரதமர் மஹாதிர் முகமதுவுக்கு நன்றி தெரிவித்தார்.
இன்று காலை இந்தோனேஷியாவின் ஜகார்தாவில் இருந்து தனி விமானம் மூலம் கோலாலம்பூர் சென்றடைந்தார் பிரதமர் மோடி. அங்கே அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் புத்ரஜயாவில் மோடி, மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மதுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
மலேசியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்றதற்கு, அவருக்கு மோடி வாழ்த்து தெரிவித்தார். இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும், வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்குவிப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதன் பின்னர் தனது டிவிட்டர் பதிவில் மோடி குறிப்பிட்ட போது, மலேசியா பிரதமர் உடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும், தமக்கு சிறப்பான வரவேற்பு அளித்தமைக்காக நன்றி கூறிக் கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார். எதிர்காலத்தில் இந்தியா – மலேசியா இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆக்கப்பூர்வ விவாதம் மேற்கொண்டதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும், மலேசியாவின் மக்கள் தனக்கு அளித்த சிறப்பான வரவேற்புக்காக தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளார் மோடி.
Delighted to have met Deputy PM Wan Azizah Wan Ismail and Mr. Anwar Ibrahim. We had fruitful discussions on a wide range of subjects relating to India-Malaysia friendship. pic.twitter.com/ifCwNvzct8
— Narendra Modi (@narendramodi) May 31, 2018




