fifa2026 - 2026

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

விளையாட்டு உலகம்
fifa2026 - 2026

உலகக் கோப்பை கால்பந்து போட்டி -2026 பகுதி 8

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகள் ஏற்கனவே உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளில் விளையாடியிருக்கின்றன. 1966ஆம் ஆண்டு இந்த இரு அணிகளும் காலிறுதி ஆட்டத்தில் மோதின. இதில் இங்கிலாந்து 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இங்கிலாந்து அடித்த கோலை ஆஃப்சைடு என்று கூறி அர்ஜெண்டைனா ஏற்கவில்லை. அர்ஜெண்டைனா அணியின் அணித்தலைவர் அண்டோனியோ ராட்டின் ஆட்டத்தின் இரண்டாவது எச்சரிக்கையைப் பெற்று, வெளியேற்றப்பட்டார். ஆனால் அவர் வெளியேற மறுத்துவிட்டார். பின்னர் காவலர்களை அழைத்து அவரை வெளியேற வைத்தனர்.

          இதன் பின்னர் 1986ஆம் ஆண்டு உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் விளையடின. இந்த ஆட்டத்தில்தான் மரடோனா தனது கையால் பந்தத் தல்லி கோலடித்தடித்ததாகக் கூறப்படு “கடவுளின் கை கோல்” அடிக்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் அர்ஜெண்டைனா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. மரடோனா இரண்டு கோல்களையும் அடித்தார்.

          1998 உலகக் கோப்பையின்போது ரவுண்ட் 16இல் இரு அணிகளும் சந்தித்தன. ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் போட்டிருந்தன. அதனால் ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டுக்குப் போனது. அதில் அர்ஜெண்டைனா அணி 4-3 என்ற கோல் கணக்கில் வென்றது. 2022ஆம் ஆண்டு உலகக் கோப்பை குழு ஆட்டத்தில் இரு அணிகளும் சந்தித்தன. இங்கிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

          இந்த உலகக் கோப்பையில் இரு அணிகளும் அரையிறுதியில் மோதுகின்றன. நீண்ட நாள்களுக்குப் பின்னர் ஒரு நாக்அவுட் ஆட்டத்தில் இரு அணிகளும் மோதுகின்றன. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளுக்கு இடையில் தள்ளுமுள்ளு, சட்டையைப் பிடித்து இழுத்தல் ஆகியவை நடந்தன. மோதல் காரணமாக ஆட்டம் சிறுது நேரம் நிறுத்தப்பட்டது.

          இரண்டாவது பாதியில், 55ஆவது நிமிடத்தில், இங்கிலாந்து அணியின் அந்தொணி கோர்டன் ஒரு கோலை அடித்தார். அதன் பிறகு இங்கிலாந்து அணியின் கோச் அணியில் புதிய வீரர்களை இறக்கினார். இதனால் அணியின் ஆட்டத்தில் தளர்வு ஏற்பட்டது. ஆட்டத்தின் 85ஆவது நிமிடத்தில், அர்ஜெண்டைனா அணியின் என்சோ ஃபெர்னாண்டஸ் சமன் செய்யும் கோலை அடித்தார். கூடதல் நேரத்தில் அந்த அணியின் லௌதாரோ மார்டினஸ் இரண்டாவது கோலை அடித்தார். இதனால் அர்ஜெண்டைனா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்று இறுதி ஆட்டத்திற்குத் தகுதிபெற்றது.

          மூன்று மாற்றும் நான்காம் இடத்திற்கான ஆட்டம் ஜூலை 18இல் மியாமியில் பிரான்சு, இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெறும். இறுதிப் போட்டி ஜூலை 19இல் நியூயார்க்,- நியூஜெர்சியில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில் அர்ஜெண்டைனா, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.