
யூரோ 2020 காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டிகள் – இரண்டாம் நாள்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
நேற்று, 27 ஜூன் 2021 அன்று யூரோ 2020இல் இரண்டு போட்டிகள் நடைபெற்றன.
முதல் போட்டி நெதர்லாந்துக்கும் செக் குடியரசிற்கும் இடையில் 27 ஜூன் 2021 அன்று இந்திய நேரப்படி 2130 மணிக்கு புடாபெஸ்ட்டில் நடைபெற்றது.
இரண்டாவது போட்டி பெல்ஜியம் மற்றும் போர்ச்சுகல் இடையே ஸ்பெயினின் செவில்லியில் 28 ஜூன் 2021 அன்று அதிகாலை இந்திய நேரப்படி 0030 மனிக்கு நடைபெற்றது.
இவை நாக்-அவுட் போட்டிகள், எனவே தோல்வியுற்ற அணி வெளியே செல்லும் மற்றும் வென்ற அணி அடுத்த கட்டத்திற்கு செல்லும்.
நெதர்லாந்து vs செக் குடியரசு
(செக் குடியரசு வெற்றி, 2-0)
நெதலாந்தின் டோமாஸ் சூசெக்கிற்கு இன்று ஒரு கனவு நாள். இன்று அவர் தனது அணிக்கு ஒரு பிரபலமான வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளார், இதனால் செக் குடியரசு அணி போட்டியை விட்டு வெளியேறியது. வெஸ்ட் ஹாம் மிட்பீல்டரான டோமாஸ் சூசக் இன்றைய தினம் தனது நாட்டின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்நாளில் அவர் அதிர்ச்சியூட்டும் வகையில் ஒரு யூரோ கால்பந்துப் போட்டியில் ஒரு பெரிய அணியை வீழ்த்த ஆசைப்பட்டிருக்கமாட்டார். ஆனால் அது நடந்துவிட்டது. காலிறுதிக்குச் செல்லும் நெதர்லாந்து குரூப் போட்டிகளில் இங்கிலாந்திடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது நினைவிருக்கலாம்.
இப்போது அவர்கள் அஜர்பைஜானுக்குச் செல்கின்றனர், அங்கு சனிக்கிழமை காலிறுதியில் டென்மார்க்கை எதிர்கொள்கின்றனர். இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் எந்த கோல்களும் எடுக்கவில்லை.
நெதர்லாந்து வீரர் மதிஸ் டி லிக்ட் 55ஆவது நிமிடத்தில் கையால் பந்தைத் தடுத்ததற்காகவும் ஒரு கோலைத் தடுத்ததற்காகவும் சிவப்பு அட்டை வாங்கினார். இதன் பின்னர், டிஃபென்டர் டோமாஸ் ஹோல்ஸ் (68 வது நிமிடம்), ஸ்ட்ரைக்கர் பேட்ரிக் ஷிக் (80 வது நிமிடம்) ஆகிய இருவரும் தொடர்ந்து இரண்டு கோல்களைப் பெற்றனர்.
என்ன சொல்ல? நாக் அவுட் நிலை சில அணிகளை பயப்பட வைக்கிறது, மற்றவர்கள் எச்சரிக்கையாகவும், ஒரு கூண்டுக்குள் இருப்பவர்கள் போலவும் இருக்கிறார்கள். அதே சமயம் சிலர் காலில் ஊசிப்பாட்டாசு கொளுத்தியது போல விளையாடுகிறார்கள்.

பெல்ஜியம் vs போர்ச்சுகல்
(பெல்ஜியம் வெற்றி 1-0)
தோர்கன் ஹசார்ட் அடிட்த கோலால் இத்தாலிக்கு எதிரான யூரோ 2020 காலிறுதி போட்டிக்கு பெல்ஜியம் தகுதி பெற்றது. தற்போதைய சாம்பியனான போர்ச்சுகலின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.
செப்டம்பர் 1989 பின்னர் பெல்ஜியம் போர்ச்சுகலை வென்றுள்ளது இதுதன் முதல் முறை. அமைதியான முதல் பாதியின் இறுதி நிமிடங்களில் தோர்கன் ஹசார்ட் 43ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இரண்டாவது பாதியில் ஏராளமான அழுத்தங்களில் இருந்து தப்பிய ராபர்டோ மார்டினெஸின் அணி வெற்றியைப் பெற்றது.
ஆனால் ஃபினிஷிங் டச் காணாமல் போனதால், கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பாரிஸில் வெற்றிபெற்ற போர்ச்சுகல் அணிக்கு இது பயணத்தின் முடிவாகப் போனது. ரொனால்டோ நான்கு ஆட்டங்களில், நான்கு கோல்களுடன் வெளியேறினார். அவர் தற்போது போட்டியின் அதிக கோல் அடித்தவர் ஆவார்.
36 வயதான அவர் 2024ஆம் ஆண்டில் ஜெர்மனியில் நடக்கவிருக்கிற ஆறாவது யூரோவுக்குத் திரும்புவாரா அல்லது கத்தார் உலகக் கோப்பைக்குப் பிறகு போட்டிக்குப் பின்னர் விலகிவிடுவாரா என்பதைப்பொருத்திருந்து பார்க்க வேண்டும். போட்டிக்கு முன்பு பெல்ஜியம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது ஒரு கடினமான மற்றும் ஆர்வமற்ற ஆட்டமாக இருந்தது.
31 ஆட்டநளாக தோற்காத ராபர்டோ மான்சினியின் அஸ்ஸுர்ரி (இத்தாலிய அணி) அணியொடு விளையாட் அவர்கள் தங்கள் விளையாட்டை உயர்த்த வேண்டும்.
ஜூலை 2 சனிக்கிழமையன்று ம்யூனிச்சில் ஆஸ்திரியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இத்தாலியை பெல்ஜியம் எதிர்கொள்ளும்.