
உசிலம்பட்டி அருகே 60 வயது மூதாட்டி தனது நிலப்பிரச்சனையை தீர்த்து வைக்க கோரி செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அய்யம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 60 வயது மூதாட்டியான சின்னத்தாய் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது.
அந்த நிலமானது, கூட்டுப்பட்டாவில் இருப்பதால், கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக சின்னத்தாய் விவசாய நிலத்தை உழுது விவசாய பணிகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதை போல், அவருடைய உறவினரும் இன்று விவசாய நிலத்தை உழுது விவசாய பணிகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. தானும் விவசாய பணிகளை மேற்கொண்டேன்.
அது போக அவரும் வந்து விவசாய பணி செய்து வருவதாக குற்றம் சாட்டி தனக்கு நியாயம் வேண்டுமென அருகில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்பு துறையினர், உசிலம்பட்டி நகர் போலீசார் மற்றும் வட்டாட்சியர் கார்த்திகேயன்,
வருவாய் ஆய்வாளர் இனியன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

