Rs2000 - 2026

இந்தியன் வங்கி ஏடிஎம்களில் மார்ச் 1ம் தேதி முதல் ரூ.2000 நோட்டுகள் கிடைக்காது என இந்தியன் வங்கி அறிவிப்பு செய்துள்ளதால் விரைவில் ரூ.2000 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு வர வாய்ப்பு இருப்பதாக வதந்திகள் பரவி வருகிறது

இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவின் பேரில் 2000 ரூபாய் நோட்டுகளை ஏ.டி.எம். மையங்களில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் இந்தியன் வங்கி ஈடுபட்டுள்ளதாகவும், இதனையடுத்து ஏ.டி.எம்.களில் 2000 ரூபாய் நோட்டுகள் இனிமேல் பணபரிவர்த்தனை செய்யப்படமாட்டாது என்று இந்தியன் வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

அதேபோல் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கி ஏ.டி.எம்.களில் செலுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தும் போது 2000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த வேண்டாம் என இந்தியன் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

மேலும் வங்கி பணப் பரிவர்த்தனைகளிலும் இனிமேல் ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை மார்ச் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளதால் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending