தேர்தலுக்கு தயாராகுங்கள்: காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு சோனியா அறிவுறுத்தல்

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

புது தில்லி:
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இப்போதிருந்தே தயாராகுமாறு காங்கிரஸ் கட்சி எம்பி.,க்களுக்கு சோனியா காந்தி அறிவுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், தில்லியில் இன்று காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, நாம் புதிய தலைவரை பெற்றிருக்கிறோம். தலைவர் பதவியில் அவர் சிறப்பாக செயல்பட வேண்டும் என உங்கள் சார்பில் நானும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அரசு பதவிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த ஆட்சியில் நீதித்துறை, ஊடக மற்றும் பொது சமூகம் என அனைத்தும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன. எதிர்க் கட்சிகளுக்கு எதிராக புலனாய்வு அமைப்புகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

குஜராத், ராஜஸ்தான் தேர்தல் முடிவுகள் நமக்கு உற்ஸாகத்தை அளித்துள்ளன. இது மாற்றத்திற்கான நேரம். இதேபோல், காங்கிரஸ் கட்சியின் எழுச்சிக்கு எடுத்துக்காட்டாக கர்நாடக தேர்தல் முடிவுகளையும் எதிர்பார்க்கிறேன்.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

நாடாளுமன்றத்துக்கு தேர்தல் முன்கூட்டியே வரலாம். எனவே, எம்.பி.க்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்… என்று பேசினார்.

Related articles

Recent articles

spot_img