pm modi in thiruparankundram temple - 2026

அசுரர்கள் வலைப் பின்னலில் சிக்கிய இந்தியா!

உரத்த சிந்தனை அரசியல் லைஃப் ஸ்டைல்
pm modi in thiruparankundram temple - 2026

அசுரர்கள் வலைப்பின்னலில் சிக்கிய இந்தியா!ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்!


பாஜகவுக்கு எதிரான போராட்டங்களை இன்னொரு சுதந்திரப் போர் என்று சொன்னார் நக்சல் நேகா போரா. உண்மை தான் அக்டோபர் 10ம் தேதி முதல் இந்த தேசம் இன்னொரு சுதந்திர போரை சந்திக்க அனைத்து வாய்ப்புகளும் இருக்கிறது. ஆனால் இந்த முறை போர் இந்தியாவிற்கும் அந்நிய நாட்டுக்கும் இடையே இல்லை. இந்தியர்களுக்கும் அந்நிய கைக்கூலிகளான இந்தியர்களுக்கும் தான்.

டெல்லியில் நடப்பது தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம், SIR தான் காரணம் என்று நீங்கள் நினைத்தால், சாரி.. நீங்கள் முட்டாளாக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

நேபாள், பங்களாதேஷ், இலங்கை மற்றும் பல உலக நாடுகளில் புரட்சி என்ற பெயரில் கலவரம் நடத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை வீழ்த்தி சர்வாதிகார ஆட்சியை கொண்டு வந்தார்களோ, அதே முயற்சி தான் இந்தியாவிலும் நடக்கிறது. நடக்கப் போகிறது.

அதெப்படி போராட்டம் செய்பவர்களை அந்நிய கைக்கூலிகள் என்று சொல்லலாம், நியாயமான காரணத்திற்காக அவர்கள் போராடலாமே என்று நீங்கள் சமாதானம் செய்யலாம். ஆனால் உண்மை அதுவல்ல,

கரப்பான் கட்சியின் சவுரவ் தாஸ் நேற்று தெளிவாக சொல்லிவிட்டார். ஞானேஷ்குமார் ராஜினாமா செய்தாலும் இவர்கள் போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை. ஒட்டுமொத்த தேர்தல் நடைமுறைகளையும் மாற்ற வேண்டும் என நிறைவேற்றவே முடியாத கோரிக்கையை முன்வைத்திருக்கிறார். அதுவரை போராட்டம் தொடரும். எனவே இந்தியா முழுவதிலும் இருந்து டெல்லிக்கு வருபவர்கள் பல நாட்கள் தங்குவதற்கு தயாராக வாருங்கள் என்று வெளிப்படையாக அழைப்பு விடுத்திருக்கிறார்.

தேர்தல் ஆணையர் ராஜினாமா, SIR குளறுபடிகள் என்ற காரணமெல்லாம் கண்துடைப்பு.

பங்களாதேஷில் என்ன நடந்ததோ அது அப்படியே இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது.

ஷேக் ஹசீனா தேர்தலில் வெற்றி பெறுகிறார். ஆனால் தேர்தலில் முறைகேடு என்று கிளம்புகிறார்கள். பங்களாதேஷ் தேர்தல் ஆணையர் மீது குற்றச்சாட்டு. முறைகேடு செய்து வென்று விட்டார் என்று போராட்டங்கள் தொடங்கி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷேக் ஹஸீனா நாட்டை விட்டே ஓடினார்.

இந்தியாவிலும் அதே தான். நாடாளுமன்ற தேர்தலில் மோடி வென்றார், மற்ற மாநில தேர்தல்களில் பாஜக வென்றது. காங்கிரசும் வென்றது. ஆனால் பாஜகவின் வெற்றி மட்டும் கேள்விக்குறியாக்கப்படுகிறது. அதற்கு தேர்தல் முறைகேடு, வாக்காளர் பட்டியல் முறைகேடு என்று காரணம் காட்டப்படுகிறது.

உண்மையில் இவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டை ஒருபோதும் யாராலும் நிரூபிக்க முடியாது. அதே போல் தேர்தல் நேர்மையாக, நியாயமாக நடந்தது என்பதையும் நிரூபிக்க முடியாது.

முறைகேடு நடந்ததற்கு ஆதாரம் இல்லை எனவே தேர்தல் நேர்மையாக நடந்தது. நேர்மையை நிரூபிக்கவில்லை அதனால் முறைகேடு நடந்திருக்கிறது என மாறி மாறி குற்றம் சொல்லலாம்.

இன்று இந்த போராட்டம் நடப்பதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே விதை போடப்பட்டு விட்டது. சென்ற ஆண்டே வோட் சோரி என்று ஆரம்பித்தார் ராகுல். எந்த ஆதாரமும் இல்லை. தொடர்ச்சியான பிரச்சாரத்தின் மூலம் பொய்யை உண்மையாக்குவது.

இன்று பாருங்கள் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும், தேச விரோதிகளும், எதிரி நாடுகளும், ஒன்றாக கைகோர்த்து நிற்கிறார்கள்.

ஏனென்றால் தேர்தல் மூலம் பாஜகவை வீழ்த்தவே முடியாது என்ற இடத்திற்கு வந்து விட்டார்கள். அதுவும் காங்கிரஸ் கட்சி இருக்கும் வரை பாஜக தான் ஜெயிக்கும் என்பதால் தான் கரப்பான் கட்சி.

நீதிபதி ஒரு கருத்து சொன்னார் என்பதற்காக கோபத்தில் ஆரம்பிக்கப்பட்ட கட்சி என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இன்று அவர்கள் பாஜகவை விடவும், காங்கிரஸ் கட்சியை விடவும் ஒருங்கிணைப்போடு செயல்படுகிறார்கள். அவர்களுக்கு பின்னால் இருக்கும் சப்போர்ட் சிஸ்டம் அதி பயங்கரமானது. காங்கிரஸ் கட்சியே தங்கள் இருப்பை காட்டிக் கொள்ள போராடுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

கரப்பானின் பின்னால் இருப்பது ஏதுமறியாத இளைஞர்கள். அவர்களுக்கு வரலாறு தெரியாது, தேர்தல் நடைமுறைகள் தெரியாது, அரசமைப்பு தெரியாது. தன் வயதுள்ள இளைஞர்கள் ஒன்று கூடுகிறார்கள், போராடுகிறார்கள். எனவே இவனும் செல்கிறான். அவ்வளவு தான். மும்பையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்களுக்கு தேர்தல் ஆணையர் பெயரே தெரியவில்லை.

பாஜகவை வீழ்த்துவதற்கு மட்டுமே இந்த போராட்டம். பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். அதன் பிறகு ஜனநாயகம் வென்றது என்று அவர்களாகவே சொல்லிக்கொள்வார்கள். ஓட்டுத்திருட்டை தடுத்து இந்தியாவை காப்பாற்றி விட்டோம் என்று பொய்யான வரலாறை நம் மீது திணிப்பார்கள். பொம்மையான ஒரு அரசாங்கத்தை அமைத்து இந்தியாவின் வளர்ச்சியை தடுப்பார்கள். இவையெல்லாம் தான் நோக்கம்.

ஒருவேளை உங்களுக்கு சந்தேகம் இருந்தால் பங்களாதேஷை பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு காலத்தில் டெக்ஸ்டைல் உற்பத்தியில் இந்தியாவுடன் போட்டு போட்ட நாடு, இன்று மின்சார தட்டுப்பாட்டில் இருக்கிறது.

மிகமுக்கியமாக அடுத்த சில நாட்களில் இந்தியா தகவல் தொழில்நுட்ப போரை சந்திக்க போகிறது. Information Warfare . டெல்லியில் நடப்பதாக ஆயிரக்கணக்கான செய்திகள் உங்களை வந்து சேரும். இந்தியாவில் மனித உரிமை மீறல் என்று உலக மீடியா அலறும். பல உலக நாடுகள் குரல் கொடுக்கும். உலக பிரபலங்கள் குரல் கொடுப்பார்கள். பேக் நியூஸ்கள் கட்டுக்கடங்காத வேகத்தில் பரவும். டெல்லி விவசாயிகள் போராட்டம் நினைவிருக்கிறதா? இதையெல்லாம் தடுக்கவே முடியாது.

இன்பர்மேஷன் வார்பேரில் இந்தியா படு வீக். அது மட்டும் இல்லாமல் இந்தியாவுக்கு ஆதரவாக, மத்திய அரசுக்கு ஆதரவாக செய்திகள் வெளியிட, டிபெண்ட செய்ய பெருங்கூட்டம் இருக்கிறது தான். ஆனால் எதிரில் அதை விட மிகப்பெரிய கூட்டம் இருக்கிறது.

இந்தியாவில் இருக்கக்கூடிய இடதுசாரிக் கூட்டம், தேசவிரோதிகள், சிறுபான்மையினர், அனைத்து எதிர்க்கட்சியினர் இவர்கள் மட்டும் இல்லாமல், பாகிஸ்தான், துருக்கி, பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளில் இருந்து தகவல் தாக்குதல் நடத்தப்படும்.

CJP , காங்கிரஸ் போராட்டங்களில் கூட இந்திய தப்பிக்கலாம். ஆனால் தகவல் தொழிநுட்ப போரில் இந்தியா ஜெயிக்கவே முடியாது. அப்படிப்பட்ட வலைப்பின்னலில் சிக்கியிருக்கிறது இந்தியா.

இந்த சூழ்ச்சியில் இருந்து பாஜக தப்புமா? ஏனென்றால் பாஜகவை வீழ்த்துவதற்கு போராட்டங்கள் நடப்பது இது ஒன்றும் முதன்முறையல்ல. விவசாயிகள் போராட்டம், டெல்லி ஷாஹின் பாக் போராட்டம். மல்யுத்த வீரர்கள் போராட்டம், நீட் போராட்டம் என பாஜகவுக்கு எதிராக முன்னெடுத்த பல போராட்டங்கள் மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் நீளும்.

இந்த முறையும் ஒரு நீண்ட போராட்டத்திற்கு சதிகார கும்பல் தயாராகிறது. தமிழகத்தில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு குரல் கேட்கும். தமிழகம் ஏன் அமைதியாக இருக்கிறது என்று பிரகாஸ்ராஜ் கேட்டிருக்கிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போல தமிழகத்தில் ஒன்று ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அந்த ஆண்டவன் தான் இந்தியாவைக் காப்பாற்றவேண்டும்.

  • மகா தேவன்