மீனாட்சி அம்மன் கோயில்.. 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம்.. அறிவிப்பை திரும்பப் பெற்ற அறநிலையத்துறை!

meenakshi 2
meenakshi 2

கடந்த மாதம் மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, தியேட்டர்கள், கோயில்கள் உள்ளிட்ட பொது இடங்களில் 2 டோஸ் போட்டுக்கொண்டவர்களுக்கே அனுமதி எனக் கூறப்பட்டது.

இதனைப் பின்பற்றி வேலூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகமும் இதே அறிவிப்பை வெளியிட்டன. அந்த வகையில் மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “2 டோஸ் செலுத்தியவர்கள் மட்டுமே டிச.13ஆம் தேதி முதல் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

கோயிலின் நான்கு கோபுர வாசல்களிலும் கீழ்கண்ட ஏதாவது ஒரு ஆவணம் சமர்ப்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது .

  1. கோவிட் தடுப்பூசி சான்றிதழ் நகல் வைத்திருப்பது
  2. கைபேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட சான்றிதழ்
  3. பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணில் குறுந்தகவல் வைத்திருப்பது
  4. Whatsapp செயலி மூலம் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல்
  5. கைபேசி எண் மூலமாக கோவின் இணையதளத்தில் உறுதிசெய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து பக்தர்களிடையே கடும் அதிருப்தி நிலவியது. இந்நிலையில் இந்த அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாக காரணங்களுக்காக அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாக இந்துசமய அறநிலையத்துறை மதுரை மண்டல இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

பக்தர்கள் வழக்கம் போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். எனினும் இன்னும் சில நாட்களில் இந்த அறிவிப்பு மீண்டும் வரலாம் என சொல்லப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories