அரவக்குறிச்சியில் வரும் 22-ம் தேதி வேட்பு மனுதாக்கல் ஆரம்பமாகிறது. வரும் 29-ம் தேதி மனுதாக்கல் நிறைவுபெறுகிறது. மே18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மே 23 தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்நிலையில் அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியின் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார்.



