ஐ.நா. சபையின் தீர்மானங்களை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அதிக சக்தி வாய்ந்த அணுகுண்டுகள் உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாக வடகொரியா சோதனை செய்து, சர்வதேச நாடுகளை மிரள வைத்தது.
இந்த சூழலில் தென்கொரியாவில் நடந்த குளிர் கால ஒலிம்பிக் போட்டிகள் வடகொரியா-தென்கொரியா இடையே அமைதியை ஏற்படுத்த வழிவகை செய்தது. இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசி கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்டினர்.
இந்த நிலையில், வடகொரியா அணுகுண்டுடன் கூடிய அதிநவீன ஆயுதம் ஒன்றை நேற்று முன்தினம் சோதித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோதனையை அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் நேரில் பார்வையிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



