
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டிக்கத் தவறிய திறனற்ற திமுக., அரசைக் கண்டிப்பது, தமிழகத்தில் அனைத்துப் பெண்களுக்கும் ரூ.1000 வழங்குவதாக வாக்குறுதி தந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், கண்ணீரில் வாழும் ஏழைக் குடும்பங்களை காக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டிப்பது.
மூன்று முறை மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, வாகன பதிவுக் கட்டணங்கள் உயர்வு, பத்திரப்பதிவு கட்டணங்கள் உயர்வு என மக்கள் மீது அனைத்து விதமான கட்டண உயர்வை விதித்து இருப்பதை கண்டிப்பது என்பது உள்ளிட்ட அம்சங்களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநிலம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகள் பஞ்சாயத்துகள் வரை ஆயிரக்கணக்கான இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில, மாவட்ட நிர்வாகிகள் தங்கள் பகுதியில் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் சந்தைமேடு பகுதியில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து, பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு, நகர் தலைவர் கார்த்திக், கிழக்கு மாவட்ட செயலாளர் சித்ரா தேவி ஆகியோர் தலைமை தாங்கினர். கிளைத் தலைவர்கள் கெங்கைவாசன், சுரேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மண்டல் தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். நிர்வாகிகள் இருளப்பன், ஶ்ரீமுருகன், காளிதாசன், கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பாலமேட்டில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக.அரசைக் கண்டித்து சங்கர்கணேஷ் தலமையில் பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது மாவட்டத் துணைத் தலைவர் சோணைமுத்து, மாவட்டச் செயலாளர் மாணிக்கம், மகளிர் அணி மாவட்ட பொது செயலாளர் முனீஸ்வரி சந்தானம், ராஜேஷ்/முனீஷ்வரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.