
கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அமைப்பு ரீதியாக உள்ள 22 நகர மற்றும் ஒன்றிய பகுதிகளில் ஆளுகின்ற மக்கள் விரோத திமுக அரசை கண்டித்து நகர வார்டு கிராம பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி அளவில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குடும்ப அட்டை உள்ள அனைத்து மகளிர்க்கும் உரிமைத்தொகை ரூபாய் ஆயிரம் வழங்க வேண்டும்,
திமுக அரசாங்கம் பதவி ஏற்ற காலத்தில் இருந்து இதுவரை தராமல் இருக்கும் மகளிர் உரிமை தொகையையும் சேர்ந்து வழங்க வேண்டும்,
மாதம் தோறும் மின்சார அளவை கணக்கீடு செய்ய வேண்டும். மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும்.
அத்தியாவசிய பொருள்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்,

காவிரி ஆற்றில் நடைபெறும் சட்டவிரோதமாக, அளவுக்கு அதிகமாக மணல் கடத்தலை தடுக்க வேண்டும்.
இது போன்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் கரூர் மேற்கு மாநகரம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மாவட்ட உள்ளாட்சி பிரிவு தலைவர் முருகேசன் தலைமை வைத்தார். மேற்கு மாநகர பொதுச்செயலாளர் மற்றும் விருந்தோம்பல் பிரிவு தலைவர் இளங்கோவன் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் சக்திவேல் முருகன், மாவட்ட முன்னாள் ராணுவ பிரிவு ரத்தினம். மாவட்ட இளைஞர் மற்றும் விளையாட்டு பிரிவு தலைவர் சதீஷ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.