railway news - 2026

ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு ரயில் முன்பதிவு நாளை தொடக்கம்

மதுரை சற்றுமுன் தமிழகம் நெல்லை பொது தகவல்கள்
railway news - 2026
#image_title

ஆயுத பூஜையை முன்னிட்டு தெற்கு ரயில்வே சார்பாக தாம்பரம் செங்கோட்டை தாம்பரம் உட்பட பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது .

சென்னை தாம்பரம் த்தில் இருந்து செங்கோட்டை போத்தனூர் ஈரோடு திருநெல்வேலி தாம்பரம் வழித்தடங்களில் சிறப்பு ரயில் சேவை இயக்கப்படுகிறது இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை அக்டோபர் 15 காலை 08:00 மணிக்கு துவங்கும் என ரயில்வே அறிவித்துள்ளது.

ஈரோடு – திருநெல்வேலி – தாம்பரம் சிறப்பு ரயில் எண்கள்: 06145 / 06146
அக்டோபர் 2026

ரயில் எண் 06145 – ஈரோடு → திருநெல்வேலி

புறப்படும் நாள்: வெள்ளிக்கிழமை, 16 அக்டோபர் 2026
ஈரோடு புறப்படும் நேரம்: மாலை 4:00 மணி
திருநெல்வேலி வந்து சேரும் நேரம்: சனிக்கிழமை மதியம் 12:30 மணி
ரயில் எண் 06146 – திருநெல்வேலி → தாம்பரம்

புறப்படும் நாள்: செவ்வாய்க்கிழமை, 20 அக்டோபர் 2026
திருநெல்வேலி புறப்படும் நேரம்: இரவு 11:40 மணி
தாம்பரம் வந்து சேரும் நேரம்: புதன்கிழமை காலை 10:30 மணி.இதில்

ஏசி 3 அடுக்கு பெட்டிகள் – 4
ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் – 4
பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் – 9
மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற இரண்டாம் வகுப்பு பெட்டிகள் – 2
உள்ளது .ஒவ்வொரு வழித்தடத்திலும் தலா ஒரு சேவை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுத பூஜை சிறப்பு ரயில் சேவை

தாம்பரம் – செங்கோட்டை – தாம்பரம் இடையேயும் அறிவித்துள்ளது

ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் தாம்பரம் – செங்கோட்டை – தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் சென்னை, திருச்சி, மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

ரயில் எண்: 06089 – தாம்பரம் – செங்கோட்டை சிறப்பு ரயில்

புறப்படும் நாள்: திங்கட்கிழமை, 19 அக்டோபர் 2026
தாம்பரம் புறப்பாடு: இரவு 11:55 மணி
செங்கோட்டை வருகை: செவ்வாய்க்கிழமை, 20 அக்டோபர் 2026 மதியம் 12:15 மணி

முக்கிய நிறுத்தங்கள் மற்றும் நேரங்கள்:

தாம்பரம் – இரவு 11:55
செங்கல்பட்டு – அதிகாலை 1:00 / 1:02
விழுப்புரம் – அதிகாலை 2:30 / 2:35
விருத்தாசலம் – அதிகாலை 3:20 / 3:22
அரியலூர் – அதிகாலை 4:03 / 4:05
ஸ்ரீரங்கம் – அதிகாலை 4:58 / 5:00
திருச்சிராப்பள்ளி – காலை 5:35 / 5:40
திண்டுக்கல் – காலை 7:22 / 7:25
மதுரை – காலை 8:35 / 8:45
விருதுநகர் – காலை 9:23 / 9:25
சிவகாசி – காலை 9:48 / 9:50
ஸ்ரீவில்லிபுத்தூர் – காலை 10:03 / 10:05
ராஜபாளையம் – காலை 10:18 / 10:20
சங்கரன்கோவில் – காலை 10:43 / 10:45
கடையநல்லூர் – காலை 11:08 / 11:10
தென்காசி – காலை 11:38 / 11:40
செங்கோட்டை – மதியம் 12:15

  1. ரயில் எண்: 06090 – செங்கோட்டை – தாம்பரம் சிறப்பு ரயில்

புறப்படும் நாள்: செவ்வாய்க்கிழமை, 20 அக்டோபர் 2026
செங்கோட்டை புறப்பாடு: மாலை 3:00 மணி
தாம்பரம் வருகை: புதன்கிழமை, 21 அக்டோபர் 2026 அதிகாலை 3:20 மணி

முக்கிய நிறுத்தங்கள் மற்றும் நேரங்கள்:

செங்கோட்டை – மாலை 3:00
தென்காசி – மாலை 3:13 / 3:15
கடையநல்லூர் – மாலை 3:32 / 3:34
சங்கரன்கோவில் – மாலை 3:58 / 4:00
ராஜபாளையம் – மாலை 4:23 / 4:25
ஸ்ரீவில்லிபுத்தூர் – மாலை 4:36 / 4:38
சிவகாசி – மாலை 4:53 / 4:55
விருதுநகர் – மாலை 5:28 / 5:30
மதுரை – மாலை 6:50 / 7:00
திண்டுக்கல் – இரவு 8:02 / 8:05
திருச்சிராப்பள்ளி – இரவு 9:15 / 9:20
ஸ்ரீரங்கம் – இரவு 9:38 / 9:40
அரியலூர் – இரவு 10:18 / 10:20
விருத்தாசலம் – இரவு 10:58 / 11:00
விழுப்புரம் – நள்ளிரவு 12:20 / 12:25
செங்கல்பட்டு – அதிகாலை 2:03 / 2:05
தாம்பரம் – அதிகாலை 3:20

பெட்டிகளின் அமைப்பு:

8 ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள்11 பொதுப் பயணிகள் இரண்டாம் வகுப்பு பெட்டிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இதில் உள்ளது