அடேங்கப்பா… எப்டில்லாம் கடத்திட்டு வர்றானுங்க?! விமான நிலையத்தில் சிக்கிய ‘தங்கங்கள்’!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
gold hyd airport - 2026

விமான நிலையத்தில் நான்கு கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. சம்ஷாபாதில் மிக அதிக அளவில் தங்கம் சிக்கியது. சம்ஷாபாத் ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் ஏர்போடில் நான்கு கிலோவுக்கு மேல் தங்கத்தை வியாழனன்று அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

துபாயில் இருந்து வந்த ஒரு பயணியிடம் இருந்து 800 கிராம் தங்கம், மஸ்கட்டில் இருந்து வந்த பயணியிடம் இருந்து 700 கிராம், சவுதி அரேபியாவிலிருந்து வந்த மூன்று பயணிகளிடம் இருந்து இரண்டரை கிலோ தங்கத்தை கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

அக்கிரமமாக தங்க கடத்தியதாக ஐந்து பயணிகள் டிஆர்ஐ (டைரக்டரேட் ஆஃப் ரெவின்யூ இன்டலிஜென்ஸ்) அதிகாரிகளிடம் சம்ஷாபாத் விமான நிலையத்தில் சிக்கினர். அவர்களிடமிருந்து 4.08 கிலோ தங்கம் பறிமுதல் செய்தார்கள்.

gold hyd airport1 - 2026

வியாழக்கிழமை நள்ளிரவில் துபாயில் இருந்து வந்த ஒரு பயணி 840 கிராம் தங்கத்தை பைப்புகளில் மறைத்து எடுத்து வந்தார். முன் சமாச்சாரம் கிடைத்ததால் அதிகாரிகள் அவரை பாதுகாப்பில் எடுத்து தங்கத்தை கைப்பற்றினார்கள்.

அதே நாள் இரவு மஸ்கட்டில் இருந்து வந்த மற்றொரு பயணியை சோதித்தபோது அவர் எடுத்து வந்த மைக்ரோவேவ் ஓவன் டிரான்ஸ்பார்மரில் இரண்டு தங்க பிஸ்கட்டுகள் வெளிப்பட்டன.

துபாயில் இருந்து வந்த இன்னும் மூன்று பயணிகளைக் கூட முன் தகவல் கிடைத்ததால் அதிகாரிகள் பாதுகாப்பில் எடுத்தார்கள். அந்த மூவரும் தங்க பேஸ்டை கேப்ஸ்யூல் ஆக மாற்றி மலத்துவாரத்தில் வைத்து எடுத்து வந்திருந்தார்கள். அறுவை சிகிச்சை மூலம் தங்கத்தை வெளியில் எடுத்தார்கள்.

இந்த மொத்த தங்கத்தின் விலை 1.66 கோடியாக கணக்கிட்டார்கள். அவர்களிடமிருந்த தங்கத்திற்கு எப்படிப்பட்ட ஆதாரமும் இல்லாததால் அவரை கைது செய்து வழக்குப் பதிவு செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.