
ஆந்திராவில் பள்ளி வகுப்பறையை மணமேடையாக்கி 12 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் அவனுடன் படிக்கும் மாணவி ஒருவருக்கு தாலிக்கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா காரணமாக நாடு முழுவதும் கடந்த 10 மாதங்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. விடுமுறை என்பதால் மாணவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிகிடந்தன. கொரோனா பாதிப்பு சற்று குறைய தொடங்கியதால் 10 மாதங்களுக்கு பிறகு 10,12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பின் தன்னுடன் படித்த சக மாணவர்களையும் நண்பர்களையும் பார்த்த மாணவர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி பகுதியில் உள்ள அரசுப்பள்ளி வகுப்பறையில் உடன்படிக்கும் மாணவிக்கு தாலிகட்டிய சிறுவன் உள்ளிட்ட 3 பேர் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அந்த சிறுவர் திருமண பாதுகாப்பு சட்டம், 2006 இன் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருமணமான இருவருக்கும் 17 வயது. விசாரணையில் சிறுவயதிலிருந்தே இருவரும் தோழர்களாக இருந்தததும் பின்பு அந்த நட்பு காதலாக மலர்ந்ததும் தெரியவந்தது.
இந்த மாணவர்களின் திருமணத்திற்கு உதவிய மற்றொரு மாணவி ஆகிய மூன்று பேரையும் பள்ளியில் இருந்து டி.சி. வழங்கி வீட்டுக்கு அனுப்பி உள்ளார்.