ஆட்டோவில் 300 மதுபாட்டில்கள் கடத்தல்! பறிமுதல் செய்த போலீஸ்!

Published:

kalla madhu
kalla madhu

ஆட்டோவில் கடத்தப்பட்ட 300 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூருக்கு புதுச்சேரியிலிருந்து மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக சிறப்பு தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தனிப்படை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் போலீசார் கரடிப்பாக்கம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த சோதனையின் போது, அவ்வழியாக வந்த ஒரு ஆட்டோவை சந்தேகப்பட்டு போலீசார் நிறுத்தினர்.

இதனையடுத்து போலீசை பார்த்த பயத்தில் ஆட்டோவில் இருந்த இரண்டு நபரில், ஒருவர் கீழே இறங்கி உடனடியாக தப்பித்து ஓடிவிட்டார்.

இதனைத்தொடர்ந்து ஆட்டோவில் போலீசார் சோதனை செய்தபோது, பயணிகள் அமரும் இருக்கைக்கு கீழ் பகுதியில் 300 மதுபாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். அதன் பின் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் கரடிப்பாக்கத்தில் வசித்து வரும் முருகன் என்பதும், தப்பி ஓடியவர் அதே பகுதியில் வசித்து வரும் சேகர் என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது.

இவர்கள் புதுச்சேரி மாநிலத்திலுள்ள திருக்கனூர் பகுதியிலிருந்து இந்த மதுபாட்டில்களை கடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து போலீசார் முருகனை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த மது பாட்டில்களையும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்து விட்டனர்.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மற்றொரு குற்றவாளியான சேகர் என்பவரை தேடி வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img