marry billmen america singer - 2026

இந்தியாவுக்கு எதிரான சக்திகளுக்கு அமெரிக்க நிதி: பாடகி மேரி மில்பென்!

சற்றுமுன் Featured அரசியல் உலகம்
marry billmen america singer - 2026

இந்தியாவுக்கு எதிரான சக்திகளுக்கு அமெரிக்க நன்கொடையாளர்கள் நிதி: மேரி மில்பென் குற்றச்சாட்டு!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபலப் பாடகி மேரி மில்பென் வெளியிட்ட கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளன. இந்தியாவில் நடைபெறும் போராட்டம் குறித்து அவர் கூறியவை:-

“இந்தியாவின் அழகான இளம் தேசபக்தர்களுக்கு: இப்போது மௌனமாக இருப்பதற்கான நேரமல்ல. பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவரது தலைமையின் கீழ் உங்களுக்குக் கிடைக்கவிருக்கும் எதிர்காலத்துக்கும் எதிராக இருக்கும் அபிஜீத் திப்கே மற்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஆகியோருக்கு, அமெரிக்க நன்கொடையாளர்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

எனது இளம் தேசபக்தர்களே, அஞ்சாதீர்கள். 25 ஆண்டுகளாக இந்தியாவுக்குச் சேவையாற்றி வரும் உங்கள் பிரதமர், அதில் 12 ஆண்டுகள் பிரதமராகப் பணியாற்றியவர்; தொடர்ந்து மூன்று முறை தேர்தலில் வெற்றி பெற்றவர். எனது நாட்டிலிருந்து (அமெரிக்கா) செயல்படும் சீர்குலைக்கும் சக்திகளுக்கு அவர் ஒருபோதும் பணியப் போவதில்லை.

இந்தக் குறிப்பிட்ட நன்கொடையாளர்கள் உலகளவில் ஒரே மாதிரியான செயல்முறையைக் கடைப்பிடித்து வருகின்றனர். பழமைவாதக் கொள்கைகளைக் கொண்ட உலகத் தலைவர்களைக் குறிவைப்பது, சம்பந்தப்பட்ட நாட்டைச் சேர்ந்த அமெரிக்காவில் கல்வி பயின்ற ஒருவரைக் கண்டறிவது, அவரைத் தீவிரவாதப் பாதைக்கு இட்டுச் செல்வது, மீண்டும் அவரது சொந்த நாட்டுக்கு அனுப்புவது, அங்கு குழப்பத்தையும் அழிவையும் ஏற்படுத்துவதற்காக அவருக்கு நிதியுதவி அளிப்பது என்பதே அந்தச் செயல்முறை.

அவர்களில் யாரும் வெற்றி பெற்றதில்லை. இருப்பினும், அவர்கள் சம்பந்தப்பட்ட நாடுகளின் வளர்ச்சியிலும் நிர்வாகத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்தியாவில் ஒரு புதிய குரல் எழ வேண்டிய நேரம் இது. இந்திய மண்ணிலேயே பிறந்து, வளர்ந்து, கல்வி பயின்ற ஒருவர் எழுச்சி பெற வேண்டும்; மக்களை ஒருங்கிணைக்க வேண்டும்; அமைதியான முறையில் செயல்பட்டு, சீர்குலைக்கும் நோக்கத்தைக் கொண்ட ‘கரப்பான் பூச்சி கட்சி’க்கு எதிராகப் போராட வேண்டும்.

ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்டுவதற்கு எப்போதும் எதிர்நிலை இயக்கம் ஒன்று இருக்க வேண்டும்.

அபிஜீத் திப்கே, உண்மை அனைவரையும் விடுதலை செய்யும். உங்களையும் கூட. நீங்கள் வெற்றி பெறாதபோது, இந்த அமெரிக்க நன்கொடையாளர்கள் உங்களை ஒரு பொருட்டாகவே கருதாமல் கைவிட்டுவிடுவார்கள். நீங்கள் வெற்றி பெறப் போவதில்லை. ஏனெனில், சட்டமற்ற செயல்கள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை.

அதற்குப் பதிலாக, அமெரிக்காவில் நீங்கள் பெற்ற கல்வியையும் உங்கள் திறமையையும் நல்ல நோக்கங்களுக்காகப் பயன்படுத்துங்கள். பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசுங்கள். இந்தியாவின் முன்னேற்றத்துக்கு உதவும் வகையில் நேர்மறையான குரலாகச் செயல்படுங்கள்.

சரியானதைச் செய்வதற்கான உங்கள் துணிச்சலின் உண்மையான வெளிப்பாடு, இனி நீங்கள் எடுக்கப்போகும் நடவடிக்கைகளில்தான் இருக்கிறது.

பிரதமருக்கு அமெரிக்காவின் ஆதரவு தேவையில்லை. அவருக்கு ஆதரவாக 150 கோடி அழகான இந்தியக் குடிமக்கள் இருக்கிறார்கள். கடந்த 25 ஆண்டுகளாக அவர்கள் அவருக்கு ஆதரவளித்து வருகின்றனர்; அதில் 12 ஆண்டுகள் அவர் பிரதமராகப் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து மூன்று முறை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். 2029ஆம் ஆண்டிலும் அவர் மீண்டும் வெற்றி பெறுவார். இதுதான் உண்மை.

எழுச்சி பெறுங்கள், இளம் தேசபக்தர்களே! எழுச்சி பெறுங்கள்!”

— மேரி மில்பென் (Mary Millben), அமெரிக்கப் பாடகி