
நேற்று கோவாவில் ஜிஎஸ்டி கவுன்சில் அதிகாரிகளுடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில் முக்கியமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிரடி வரி குறிப்பினை அறிவித்தார்.
அதனையடுத்து தற்போது வெட் கிரைண்டர்களுக்கு அதிரடி வரிச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கிரைண்டர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த 12% ஜிஎஸ்டி வரி ஆனது தற்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கிரைண்டர்களின் விலை அதிரடியாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
இதனால் சாமானிய மக்கள் மற்றும் பெண்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



