4வதாக செஞ்சி எம்.எல்.ஏ.,வுக்கு கொரோனா தொற்று உறுதி!

அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்
chenji mla
chenji mla

நான்காவது எம்.எல்.ஏ.,வாக, செஞ்சி தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., மஸ்தானுக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் அரசு அதிகாரிகள், போலீஸார், எம்எல்ஏ.,க்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அரசின் உத்தரவை ஏற்று, வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்த எம்.எல்.ஏ.,க்களை அரசியலுக்காக, ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் மூலம் வெளியில் கொண்டு வந்த திமுக.,வின் தலைமையால், கொரோனா தொற்று எம்.எல்.ஏ.,க்களுக்கும் வந்துவிட்டதாகக் குற்றசாட்டு எழுந்தது.

இந்நிலையில் செய்யூர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., ஆர்.டி. அரசுவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. தொடர்ந்து, தற்போது செஞ்சி தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., மஸ்தானுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.