இசிவு சரியாக…
துளசி இவை, தும்பை இலை, இஞ்சி சம அளவு எடுத்து அம்மியில் வைத்து தட்டி அடுப்பில் சட்டியை ஏற்றி ஒரு ஸ்பூன் சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு நன்றாக வதக்கி எடுத்து கசக்கி சாறு பிழிந்து குழந்தைகளுக்கு அரை சங்களவு வெந்நீருடன் கலந்து கொடுக்க இசிவு நிற்கும். பெரியவர்களுக்கு அரை அவுன்ஸ் கொடுக்க வேண்டும். ஆனால், கர்ப்பிணிகளுக்கு இதைக் கொடுக்கக் கூடாது.
நகச்சுற்றுக்கு…
உப்பு. வெங்காயம். சுடுசோறு இவற்றை சம அளவு எடுத்து மை போல் அரைத்து நகச்சுற்றின் மேல் வைத்து கட்டி வர சில நாள்களில் குணமாகி விடும்.
காது வலி சரியாக…
மஞ்சள் கரிசலாங்கண்ணிச் சாறெடுத்து வலியுள்ள காதில் இரண்டு சொட்டு விட காது வலி குணமாகும்.
காதில் சீழ் வடிந்தால்…
வசம்பு, பூண்டு, கறிமஞ்சள் வகைக்கு அரை ரூபாய் எடை எடுத்து அரை ஆழாக்கு வேப்பெண்ணெயில் தட்டிப் போட்டு பதமாக காய்ச்சி இறக்கி வைத்துக் கொண்டு இரண்டு துளி காதில் விட்டு வர காதில் சீழ் வடிவது நிற்கும்.
வெள்ளை முள்ளங்கியின் இலையை கசக்கி சாறெடுத்து காதில் இரண்டு துளி விட்டால் காது வலி, காதில் சீழ், இரத்தம் வருதல் நின்று விடும்.
கண்ணில் நீர் வடிகிறதா?
படுக்கு முன் கண்ணில் ஒரு துளி வெங்காயச் சாறு விட்டு வர மூன்று நாள்களில் குணமாகும்.