
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பொது வெளியில் மிகவும் அமைதியான, ‘மிஸ்டர் கூல்’ என அறியப்படுபவர்.
கிரிக்கெட் உலகில் இவருக்கு ‘தி வால்’ (சுவர்) என்ற செல்லப்பெயரும் உண்டு.
ராகுல் டிராவிட் தற்போது புதிதாக கிரெடிட் கார்ட் கட்டணங்களைச் செலுத்தும் ‘கிரெட்’ இணையத்தளம் மற்றும் ஆப் விளம்பரத்தில் நடித்துள்ளார்.
இந்த விளம்பரம், நெட்டிசன்களையும், கிரிக்கெட் வீரர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளதோடு விளம்பர வீடியோ வைரலாகி வருகிறது.

எப்பொழுதும் மிஸ்டர் கூல் என்று அறியப்பட்ட டிராவிட், இந்த விளம்பரத்தில் முற்றிலும் கோபமான மனிதராக மாறி நடித்திருப்பதுதான் அந்த விளம்பரம் இவ்வளவு பேசப்படுவதற்கு காரணம்.
தன்னை முந்திச்செல்லும் காரின் ஸைடு மிரரை ஆக்ரோஷமாக அடித்து உடைக்கும் டிராவிட், ‘இந்த இடத்தில் நான் தான் ரௌடி’ என்று கோபமாக வசனம் பேசுகிறார்.
இது அவரது ரசிகர்களை மட்டுமல்லாது, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, கிரிக்கெட் வீரர் நடராஜன் போன்றவர்களையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
இந்த விளம்பரத்தை தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்த, விராட் கோலி, ‘ராகுல் பாயின் இந்த பக்கத்தை ஒருபோதும் பார்த்ததில்லை’ என்று கூறியிருக்கிறார்.
இதேபோல், ‘ராகுல் சார், யாரோ ஒருவர் மோசமான காயம் அடையப் போகிறார்’ என்று நடராஜன் ட்வீட் செய்துள்ளார்.

அதுமட்டுமல்ல ஜோமோட்டோ நிறுவனம், ‘இந்திரா நகர் பகுதியில் ரௌடி தொல்லை காரணமாக அந்த பகுதியில் இன்று டெலிவரி தாமதமாகின்றன’ என்றும் ‘சிலர் இதை உண்மையென எடுத்துக்கொண்டது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது – நாங்கள் ரௌடி என குறிப்பிட்டது சுவரை’ என்று நகைச்சுவையாக விளக்கமும் அளித்துள்ளது.
Never seen this side of Rahul bhai 🤯🤣 pic.twitter.com/4W93p0Gk7m
— Virat Kohli (@imVkohli) April 9, 2021
Rahul sir 😂😂
— Natarajan (@Natarajan_91) April 9, 2021
Somebody gonna get hurt real bad. @therealrussellp https://t.co/dahFb6E33m