sabarimala meeting on yatra - 2026

ஐப்பசி மாத பூஜை; சபரிமலை நடை திறப்பு!

ஆன்மிகச் செய்திகள் இந்தியா சற்றுமுன் சுற்றுலா
sabarimala meeting on yatra - 2026

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று மாலை (17ம் தேதி) திறக்கப்பட்டது. புதிய மேல்சாந்திகள் தேர்வு நாளை நடைபெறுகிறது.

எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஐப்பசி மாத பூஜைக்கு வரும் 18ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பு செய்துள்ளனர் நடைதிறந்த இன்று பக்தர்கள் கூட்டம் கொட்டும் மலையிலும் மிக அதிக அளவில் இருந்தது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைகள் அக் 18ம் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 18ம் தேதி உஷபூஜைக்குப் பின்னர் காலை 7.30 மணியளவில் சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோயில்களுக்கான புதிய மேல்சாந்தி பொறுப்புக்கான குலுக்கல் நடைபெறும்.

சபரிமலை சிறப்பு ஆணையாளர் ஜெயகிருஷ்ணன் மற்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஆணையாளர் சுனில்குமார் ஆகியோர் தலைமையில் திருவுளச்சீட்டு முறையில் மேல்சாந்தியை தேர்வு செய்யும் நிகழ்வு நடைபெறும்.

2026-2027ம் ஆண்டுக்கான சபரிமலை மற்றும் மாளிகப்புரம் திருக்கோயில்களின் மேல்சாந்திகளைத் தேர்ந்தெடுக்கும் குலுக்கலுக்காக, இந்த முறை பந்தளம் அரண்மனையிலிருந்து தேவனந்தன் அர்ஜுன் மற்றும் அனஸ்வரா எம். ரஞ்சித் ஆகியோரை பந்தளம் அரண்மனை வலிய தம்புரான் திருவோணம் நாள் ராமவர்ம ராஜா நியமித்துள்ளார்.

இந்த இருவரும் அக்டோபர் இன்று காலையில் திருவாபரண மாளிகையின் முன்பாக இருமுடிகட்டி, வலிய கோயிக்கல் கோயிலில் தரிசனம் செய்த பின்னர், நண்பகல் 12 மணிக்கு பெற்றோர்கள் மற்றும் பந்தளம் அரண்மனை நிர்வாகக் குழுப் பிரதிநிதிகளான கேரள வர்மா, மனோஜ் வர்மா ஆகியோருடன் சன்னிதானத்தை நோக்கிப் புறப்பட்டு சன்னிதானம் வந்தனர்.நாளை அக் 18ல் இவர்கள் சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் மளிகை புறம் கோயில் மேல்சாந்தி பதவிக்கு விண்ணப்பித்து இறுதி சுற்றில் தேர்வு செய்யப்பட்டவர்களில் ஒருவரை திருஉளச்சீட்டு முறையில் தேர்வு செய்வார்கள்

அக் 22ம் தேதி இரவு 10 மணியளவில் சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் ஐப்பசி மாத பூஜைகள் நிறைவடையும். மீண்டும் இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக நவம்பர் 16ம் தேதி நடை திறக்கப்படும்.

முதலமைச்சர் வி.டி.சதீசன் மற்றும் தேவஸ்வம் அமைச்சர் கே.முரளிதரன் ஆகியோர் தரிசனத்திற்காக கோயிலுக்கு வருகைதந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை கோவிலை சுற்றி ஏற்படுத்தப்பட்டுள்ளது சபரிமலை பம்பையில் தற்போது மழை தொடர்ந்து பெய்து வருகிறதால் பம்பை நதியில் தண்ணீர் அதிக அளவில் வருகிறது