
உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலையில் சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோயில் மேல்சாந்தி தேர்வு பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. சபரிமலை மேல்சாந்தியாக அரீக்கர சுப்பிரமணியன் சங்கரன் நம்பூதிரியும், மாளிகப்புரம் மேல்சாந்தியாக ஏ. தாமோதரன் நம்பூதிரியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஞாயிறு அன்று சபரிமலை சோபானத்திலும், மாளிகப்புரம் கோவிலிலும் நடைபெற்ற குலுக்கல் மூலம் இவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பந்தளம் நாலுகெட்டு அரண்மனையைச் சேர்ந்த வி. அர்ஜுனன் மற்றும் கோட்டயம் காராப்புழ இளையகோவிலகத்தைச் சேர்ந்த சர்மதா ஆர். வர்மா தம்பதியரின் மகனான தேவநந்தன் சபரிமலை மேல்சாந்திக்கான குலுக்கலை எடுத்தார். திருப்பூணித்துறா லட்சுமி விலாசம் அரண்மனையைச் சேர்ந்த மைதிலிராஜா – ரஞ்சித் ராஜன் தம்பதியரின் மகளான அனஸ்வரா, மாளிகப்புரம் மேல்சாந்திக்கான குலுக்கலை எடுத்தார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலின் புதிய மேல்சாந்தியாக (தலைமை அா்ச்சகா்) அரீக்கர சுப்ரமணியன் சங்கரன் நம்பூதிரி தோ்வு செய்யப்பட்டாா்.
ஏழு தகுதியான நபா்கள் இந்தப் பொறுப்புக்கு விண்ணப்பத்திருந்த நிலையில், குலுக்கல் சீட்டு முறையில் அரீக்கர சுப்ரமணியன் சங்கரன் நம்பூதிரி தோ்வு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அதேபோல் ஐயப்பன் கோயிலுக்கு அருகேயுள்ள மாளிகைபுரத்தம்மன் கோயில் மேல்சாந்தியாக ஏ.தாமோதரன் நம்பூதிரி நியமிக்கப்பட்டதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
மண்டல-மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நவ.17-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது .அதற்கு ஒரு நாள் முன்பாக இருவரும் பொறுப்பேற்கவுள்ளனா். அடுத்த ஓராண்டு காலத்துக்கு அவா்கள் மேற்கூறப்பட்ட கோயில்களின் மேல்சாந்தியாக தொடா்வாா்கள்.
தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள பழவங்காடி கணபதி கோயிலின் மேல்சாந்தியாக சங்கரன் நம்பூதிரியும், கீழூரில் உள்ள சிவன் கோயிலின் மேல்சாந்தியாக தாமோதரன் நம்பூதிரியும் உள்ளனா்.
ஐப்பசி மாத பூஜைகளுக்காக சனிக்கிழமை மாலை திறக்கப்பட்ட நடை இரவு 10.00 மணிக்கு அடைக்கப்பட்டது. ஞாயிறு அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் ஐயப்பனுக்கு நெய்யபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கணபதி ஹோமம், உஷ பூஜை நடந்தது. தொடர்ந்து கார்த்திகை 1 முதல் ஓராண்டு காலத்துக்கான மேல் சாந்தி குலுக்கல் தேர்வு கோயில் முன் தொடங்கியது.
திருவிதாங்கூர் தேவசம்போர்டு சபரிமலை மேல் சாந்திக்கு நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்த ஏழு பேர் பெயர் துண்டு சீட்டில் எழுதப்பட்டு வெள்ளி பாத்திரத்தில் அடைக்கப்பட்டு குலுக்கப்பட்டது. பந்தளம் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் துண்டுச் சீட்டுகளை எடுத்தான். மூன்றாவது சீட்டாக திருவனந்தபுரம் புளிமூடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் நம்பூதிரி ,சபரிமலை மேல் சாந்தியாக தேர்வு செய்யப்பட்டார். இதே முறையில் மாளிகைபுரத்து அம்மன் கோயிலுக்கு தேர்வு செய்யப்பட்ட ஐந்து பேர் பெயர் குலுக்கி எடுக்கப்பட்டது.
இதில் கோழிக்கோடு மாவட்டம் மணியூர் பால யாடு பகுதியைச் சேர்ந்த தாமோதரன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். ஐந்தாவது சீட்டில் இவர் தேர்வானார். இவர்கள் இருவரும் கார்த்திகை 1 ல் பொறுப்பேற்று ஓராண்டு காலம் சபரிமலையில் தங்கி பூஜைகள் செய்வர். ஐப்பசி மாத பூஜைகள் முடிந்து சபரிமலை நடை 22-ம் தேதி இரவு 10:00 மணிக்கு அடைக்கப்படும்.என திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் “சபரிமலையில் வரும் நவம்பர் 17 முதல் மண்டல பூஜை காலம் தொடங்கியுள்ள நிலையில் சபரிமலை வரும் பல லட்சம் பக்தர்களை வரவேற்க சபரிமலை நிர்வாகம் இப்போது தயாராகிவிட்டது பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் பிரசாதங்களும் தேவையான அளவில் எடுத்து வைக்கப்பட்டு தட்டுப்பாடு இன்றி வழங்கப்படும்.
இந்த ஆண்டும் முன்பதிவு முறையிலேயே சபரிமலைக்கு பக்தர்கள் மண்டல மகர வழக்கு காலங்களில் தொடர்ந்து அனுமதிக்கப்படுவார்கள் இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது” என்றார்

