தூத்துக்குடியில் பள்ளி செல்லும் போது சைக்கிளில் தவறி விழுந்து தவித்துக்கொண்டிருந்த மாணவியை அரசு வாகனத்தில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியர் குவிந்தன.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகில் உள்ள குமாரரெட்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுடலையாண்டி என்பவரது மகள் கலைச்செல்வி. இவர் எட்டயபுரத்தில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் பள்ளிக்கு சைக்கிளில் செல்வது வழக்கம். அதன்படி, இன்று மதியம் குமராரெட்டியாபுரத்திலிருந்து எட்டயபுரத்தில் உள்ள பள்ளிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக கல் தடுக்கி சாலை ஓரத்தில் விழுந்துள்ளார் இதில் , மாணவி கலைச்செல்வியின் கால் மூட்டு விலகியது.
வலி பொறுக்க முடியாத மாணவி, அழுது கொண்டே சாலையோரத்தில் இருந்துள்ளார் அவ்வழியே பள்ளிக்குச் சென்ற சக மாணவிகளும் கலைச்செல்வி அருகில் செய்வதறியாது நின்று கொண்டிருந்தனர். கோவில்பட்டி பகுதிகளில் ஆய்வு மேற்கொள்வதற்காக எட்டயபுரம் சாலையில் காரில் வந்து கொண்டிருந்த ஆட்சியர் வெங்கடேஷ், சாலையில் மாணவிகள் தனியாக நின்று கொண்டிருப்பதைப் பார்த்து, காரை நிறுத்தச் சொல்லி இறங்கிச் சென்று மாணவிகளிடம் பேசி, தன்னோடு வந்த ஜீப்பில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார் ,மாவட்ட ஆட்சியரின் இந்த செயல் தான் தூத்துக்குடியில் மக்களிடையே பேச்சாகஉள்ளது

தூத்துக்குடி -பள்ளி மாணவிக்கு உதவிய மாவட்ட ஆட்சியர்
Popular Categories



