நயன்தாரா படம் குறித்து ஜாலியான கருத்தை கூறிய அனிருத்

சினி நியூஸ் சினிமா

nayan aniruth - 2026லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது கோலிவுட் திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக இருந்து வருகிறார். இளம் நடிகைகளுக்கு போட்டியாக ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ‘கோலமாவு கோகிலா’. இந்த படத்திற்கு இளம் இசைப்புயல் அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்திற்கு இசையமைக்கும் அனுபவம் குறித்து அனிருத் கூறியபோது: நயன்தாரா படத்திற்கு இசையமைப்பது என்றாலே ஒரு ஜாலிதான். இந்த படத்திற்காக 5 பாடல்கள் கம்போஸ் செய்து முடித்துவிட்டேன். இன்னும் ஒரே ர் பாடலுக்கு இசையமைத்து வருகிறேன். இந்த படத்தின் சிங்கிள் பாடலை அடுத்த மாதம் வெளியிடவுள்ளேன்

நயன்தாரா, ஜாக்குலின், சரண்யா, யோகிபாபு, நிஷா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இந்த படத்தை லைகா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பு பணியும் செய்து வரும் இந்த படம் விரைவில் வெளிவரவுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.