ஐபிஎல் டி20 லீக் தொடரின் இன்றைய லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்தது. பின்னர் 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் களமிறங்கியது. இறுதியாக அந்த அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்களை மட்டுமே எடுத்து, ஐதராபாத் அணியிடம் 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
ஐபிஎல்லில் இன்று:
இரவு 8 மணிக்கு டெல்லி – கொல்கத்தா
புள்ளி பட்டியல்:
| அணி | போட்டி | வெற்றி | தோல்வி | புள்ளி | ரன்ரேட் |
|---|---|---|---|---|---|
| சென்னை | 6 | 5 | 1 | 10 | 0.662 |
| பஞ்சாப் | 7 | 5 | 2 | 10 | 0.509 |
| ஹைதராபாத் | 7 | 5 | 2 | 10 | 0.228 |
| கொல்கத்தா | 6 | 3 | 3 | 6 | 0.572 |
| ராஜஸ்தான் | 6 | 3 | 3 | 6 | -0.801 |
| பெங்களூரு | 6 | 2 | 4 | 4 | -0.446 |
| மும்பை | 6 | 1 | 5 | 2 | 0.008 |
| டெல்லி | 6 | 1 | 5 | 2 | -1.097 |



