மீண்டும் இணையும் சிம்பு-ஆதிக்: ஆக்சன் திரைப்படமா?

சற்றுமுன்

simbu2 - 2026சிம்பு நடிப்பில் இயக்குனர் ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கிய அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ திரைப்படம் படுதோல்வி அடைந்ததோடு தமிழ் சினிமாவின் மோசமான படம் என்ற பெயர் பெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது சிம்பு சரியான ஒத்துழைப்பை அளிக்கவில்லை என இயக்குனர் ஆதிக் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் சரமாரியாக குற்றச்சாட்டுகளையும் சுமத்தியோடு, சிம்புவால் தங்களுக்கு ரூ.20 கோடி நஷ்டம் என்றும் கூறினர்,.

இந்த பிரச்சனையால் AAA இரண்டாம் பாகம் டிராப் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த இயக்குனர் ஆதிக், மீண்டும் சிம்புவுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும், இதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் இந்த படம் AAA படத்தின் இரண்டாம் பாகம் இல்லை என்றும், இந்த படம் முற்றிலும் வித்தியாசமான ஆக்சன் படம் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.