கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான சந்தோஷ் ஜெயகுமாரின் ஹரஹர மகாதேவகி’ என்ற அடல்ட் காமெடி படம் சூப்பர் ஹிட் ஆகியது. இந்த நிலையில் இயக்கிய இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கியுள்ள அடுத்த படமான இருட்டு அறையில் முரட்டு குத்து’. படத்தின் ரிலீஸ் தேதி மே 11 என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உறுதி செய்துள்ளார். இருப்பினும் தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் மே 4ஆம் தேதி ரிலீஸ் ஆகும் படங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று கூறியுள்ளது.
கவுதம் கார்த்திக், வைபவி சாண்டில்யாம் ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார், பாலு ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படமும் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது



