spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசினிமாசினி நியூஸ்அரசியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, ஆனால்...அரவிந்தசாமி

அரசியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, ஆனால்…அரவிந்தசாமி

- Advertisement -

பிரபல மலையாள இயக்குனர் சித்திக் இயக்கத்தில் அரவிந்தசாமி, அமலாபால் நடித்துள்ள ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரைப்படம் மே 11ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. இதில் அரவிந்தசாமி பேசியதாவது:

‘இப்படம் ஏற்கனவே மலையாளத்தில் வெளியாகியுள்ளது. அதில் சில மாற்றங்கள் செய்து தமிழில் படம் உருவாகி இருக்கிறது. முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கிறது. வித்தியாசமான கதைகளில் நடிக்க ஆசைப்படுகிறேன். தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்தேன். அப்படத்தை தொடர்ந்து அந்த கதாபாத்திரம் போல் 15 படங்கள் வந்தது. ஆனால், நான் நடிக்க வில்லை.

ஹீரோ, வில்லன் என்று இல்லாமல், நல்ல கதாபாத்திரம் அமைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். எனக்கு பிடிக்காதது ஹாரர் படம் தான். அதில் நடிக்க மாட்டேன். பார்க்கவும் மாட்டேன். பேய் இருக்கா, இல்லையா என்ற கேள்விக்கு முதலில் மனிதர்கள் இருக்கிறார்களா? முதலில் நல்ல மனிதரை தேடுவோம். அதன் பின் பேய்யை இருக்கா இல்லையா என்று தேடுவோம். அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்கிறார்கள். எனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது. அரசியல் குறித்து எதுவும் பேசமாட்டேன். ஆனால் மக்களுக்கு பிரச்சனை என்றால் அதற்கு குரல் கொடுப்பேன்’ என்று அரவிந்தசாமி கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe