மோடிக்கு உற்சாக வரவேற்பு! சீன அதிபருடன் இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு!

இந்தியா உலகம்

modi china - 2026

சீனாவின் உகான் நகரில் சீன அதிபர் ஸி ஜின் பிங்கை சந்தித்து பேசினார் பிரதமர் நரேந்திரமோடி சீன அதிபருடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது #China #NarendraModi

சீனா சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஊகான் நகரில் சீன அதிபர் சி ஜின்பிங்கைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நேற்றிரவு சீனா சென்றார். ஊகான் விமான நிலையத்தில் அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்குள்ள அரண்மனையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று சீன அதிபர் சி ஜின்பிங்கைச் சந்தித்துப் பேசினார்.

china modi - 2026

அப்போது இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், எல்லைத் தகராறைப் பேசித் தீர்ப்பது குறித்தும் இருவரும் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதற்கு முன் இருவரும் கடந்த ஆண்டு செப்டம்பரில் சீனாவின் சியாமென் நகரில் பிரிக்ஸ் மாநாட்டின்போது பேச்சு நடத்தியது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.