அதர்வா படம் ரிலீஸ் திடீர் தள்ளிவைப்பு

சினி நியூஸ் சினிமா

sema botha - 2026நடிகர் அதர்வா நடித்து தயாரித்த ‘செம போத ஆகாதே’ திரைப்படம் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன்களும் செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென கடைசி நேரத்தில் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த படம் வரும் 25ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதர்வா தன்னுடைய டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். மேலும் இவ்வாரம் வெளியாகும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ மற்றும் காளி ஆகிய இரண்டு படங்களும் வெற்றியடைய அவர் தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

அதர்வா, மிஷ்தி, அர்ஜெய், விரோஷன், அனைகா சோட்டி, ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார். இவர்தான் அதர்வா அறிமுகமான ‘பாணா காத்தாடி’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.