பெற்றோர் வீட்டில் எதிர்ப்பு! கிணற்றில் குதித்த காதல் மனைவி! காப்பாற்ற குதித்த காதல் கணவன்!

dhurkeshvaran 1 - 2026

தேனி அருகே காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி செய்த காதலியை காப்பாற்ற காதலனும் கிணற்றில் குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள தேட்டப்பகுதியில் குடியிருந்து வருபவர் முத்துமாரி (38) கணவர் இறந்த நிலையில் துர்கேஸ்வரன் (21) துர்காதேவி (20) வைஷ்ணவி (18) என்ற மூன்று பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். மகன் துர்கேஸ்வரன் வீரபாண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இதற்கிடையே துர்கேஸ்வரன் மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியைச் சேர்ந்த ஜஸ்வர்யா (18) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்ப வீட்டைவிட்டு வெளியேறிய ஐஸ்வரியா காதலன் துர்கேஸ்வரனை திருமணம் செய்து அவரது வீட்டிலே கடந்த ஒரு வாரமாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று ஐஸ்வர்யாவின் மாமா அழகேசன் துர்கேஸ்வரன் வீட்டிற்கு வந்து தன்னுடன் வீட்டிற்கு வந்துவிடும்படி கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனமுடைந்த ஜஸ்வர்யா வீட்டிற்கு வெளியே இருந்த தண்ணீர் இல்லாத கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதனைக் கண்ட காதலன் துர்கேஸ்வரனும் செய்வதறியாமல் அவரும் கிணற்றில் குதித்தார். கிணற்றில் நான்கு அடிக்கு மட்டும் தண்ணீர் இருந்ததால் காதல் ஜோடி இருவரும் காயங்களுடன் உயிருக்கு போராடினர். இச்சம்பவம் குறித்து தேனி தீயணைப்புத் துறையினர் தகவல் அளிக்கப்பட்டது.

விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 100 அடி ஆழம் உள்ள கிணற்றில் இரங்கி 30 நிமிடத்திற்குள் காதல் ஜோடியை கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர். ஆபத்தான நிலையில் இருந்த காதல் ஜோடியை ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories