நெல்லை மாவட்டத்தில் கமல்ஹாசன் நாளை சுற்றுப்பயணம் செய்யும் இடங்கள் அறிவிப்பு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை

மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் நெல்லை மாவட்டத்தில்unnamed 10 - 2026 நாளை சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்திக்கிறார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் குமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்.

இதற்காக நேற்று முன் தினம் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் குமரி மாவட்டம் நாகர்கோவில் சென்றார். குமரி மாவட்டத்தில் பகுதிகளுக்கு சென்று தொண்டர்கள் மற்றும் மக்களை சந்தித்தார்.

பின்னர் அவர் இன்று காலை தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மீனவர்கள், பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டார்.

இந்த நிலையில், நாளை காலை 9 மணிக்கு நெல்லை நகரில் பாளை தெற்கு பஜார், மேலப்பாளையம் சந்தை விலக்கு, கொக்கிர குளம், நெல்லை சந்திப்பு, நெல்லை டவுன் பகுதிகளில் மக்களை சந்திக்கிறார்.

பின்பு ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன் கோவில் ஆகிய இடங்களில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசுகிறார்.

பின்னர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செல்கிறார். நாளை பிற்பகல் விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.