உலக கோப்பை கால்பந்து: 2-0 கோல் கணக்கில் நைஜீரியாவை வீழ்த்தியது குரோஷியா

உலகம் சற்றுமுன் விளையாட்டு

03 June13 foot ball - 2026

உலககோப்பை கால்பந்து தொடரின் டி பிரிவு லீக் போட்டியில் குரோஷியா, 2-0 கோல் கணக்கில் நைஜீரியாவை வென்றது.

ரஷ்யாவின் காலினின்கிராட்டில் நடைபெற்ற போட்டியில், குரோஷியா மற்றும் நைஜீரியா அணிகள் மோதின. ஆட்டத்தின் 32வது நிமிடத்தில் குரோஷியா வீரர் எடேபோ கோல் அடித்து, தனது அணிக்கு முன்னிலை ஏற்படுத்தி தந்தார்.

பின்னர் ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் சக வீரரான மோட்ரிக் கோல் அடித்து 2-0 கோல் கணக்கில் குரோஷியாவை முன்னிலைப்படுத்தினார்.

நைஜீரியா அணி வீரர்களால், கடைசிவரை கோல் போட முடியவில்லை. இறுதியில், குரோஷியா அணி, 2-0 கணக்கில் நைஜீரியாவை வென்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.