காவேரியில் கருணாநிதி… சிகிச்சை பெறும் முதல் புகைப்படம் வெளியீடு! வெங்கய்ய நாயுடு உடன்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை

karunanidhi venkaiah - 2026

சென்னை: காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் முதல் புகைப்படம் வெளியிடப் பட்டுள்ளது. அவரை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு சந்திக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

உடல் நலமின்றி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் திமுக., தலைவர் கருணாநிதி. அவரைப் பார்த்து உடல் நலம் விசாரிப்பதற்காக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று சென்னை வந்தார். பிற்பகல் 12.30 மணி அளவில் காவேரி மருத்துவமனைக்கு வந்த அவருடன் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், மு.க. ஸ்டாலின், கனிமொழி, ராசாத்தி அம்மாள் உள்ளிட்டோரும் இருந்தனர்.

அப்போது எடுக்கப் பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இதுவே, கருணாநிதி சிகிச்சைக்கு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட பின்னர் வெளியிடப்பட்ட முதல் புகைப்படம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.