டி.டி.வி தினகரன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகி மீதே புகார் கூறப்பட்டுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் து.பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக, காஞ்சி நகர அ.ம.மு.க முன்னாள் செயலாளர் பரிமளம் பெட்ரோல் குண்டு வீசியதாக தகவல் அளிக்கப் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதில், டிரைவர் பாண்டியன், புகைப்படக்கலைஞர் டார்வின் காயம் அடைந்தனர். இது குறித்து அடையாறு துணை ஆணையர் விளக்கம் அளித்தார்…
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த புல்லட் பரிமளம் என்பவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவரை டிடிவி தினகரன் #அமமுகவை விட்டு நீக்கியுள்ளார்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் டிடிவி தினகரன் இல்லம் முன்பு கோஷம் எழுப்பிய புல்லட் பரிமளம் தனது ஓட்டுனர் சுப்பையா என்பவருடன் சேர்ந்த தனது காரை பெட்ரோல் ஊற்றி எரித்து, கற்களை கொண்டு தாக்கியுள்ளார். இதனால் பரிமளத்திற்கு சிறிய அளவில் தீக்காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓட்டுனர் சுப்பையாவை பிடித்து விசாரணை செய்து வருகிறோம்… என்று – துணை ஆணையர் செஷாங் சாய் விளக்கம் அளித்துள்ளார்.
சர்ச்சைக்கு பெயர் போனவர் `பேனர் புல்லட் பரிமளம்’
சர்ச்சைக்கு பெயர் போனவர் `பேனர் புல்லட் பரிமளம்’. காஞ்சிபுரம் நகராட்சியின் முன்னாள் கவுன்சிலர். இவர் வைக்கும் பேனர்கள் தமிழக அளவில் பேசப்படும். ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது, `அம்மாவுக்காக பஸ்ஸை எரித்து சிறைச்சென்ற உண்மைத்தொண்டன்’ என்று காஞ்சிபுரத்தில் இவர் வைத்த பேனரால் ஆடிப்போனார்கள் அதிமுகவினர். இதையடுத்து பேனர் விவகாரம் மேலிடத்துக்கு சென்றதால், பேனரை அகற்ற உத்தரவு வந்தது. இதனால் பேனரை அகற்றினார் பரிமளம். பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மீதான தீர்ப்பு நெருங்கும் சமயத்தில், `‘அம்மா வழக்கிலிருந்து விடுதலை. அம்மாவை நிரபராதி என்று நீதியரசர் தீர்ப்பு வழங்கியுள்ளார்’ என்ற வாசங்களை அடங்கிய பேனரை முன்கூட்டியே வைத்தவர்.
மேலும் இவர் குறித்து கட்சியினரிடையே விசாரித்தோம். அப்போது `கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க 222 இடங்களில் வென்றுவிட்டதாக தேர்தல் முடிவுகள் வருவதற்கு ஒரு நாள் முன்பாகவே பேனர் வைத்தார். இதனால், ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளான அவர், கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதேபோல், காஞ்சிபுரத்தில் எம்.ஜி.ஆர். சிலை நிறுவத் தலைமை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறித் தனது இடது கை விரல் ஒன்றைக் கடந்த 2011ம் ஆண்டு துண்டித்துப் பரபரப்பைக் கிளப்பியவர் இந்த பரிமளம்’’ என்கிறார்கள். இந்நிலையில் தற்போது தினகரன் அணியிலிருக்கும் புல்லட் பரிமளம், கட்சிப்பொறுப்பிலிருந்து தன்னை நீக்கியதற்காக பெசன்நகரில் உள்ள டி.டி.வி.தினகரன் இல்லத்திற்கு சென்று தனது காரை தானே எரிக்க முயற்சித்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.




