அரசு வேலைவாய்ப்ப தேடினா டோராமென் கேம் காட்டுது! ஹேக்கர்களால் முடக்கப்பட்டு மீண்ட யுபிஎஸ்சி தளம்!

இந்தியா சற்றுமுன் தொழில்நுட்பம் லைஃப் ஸ்டைல்

upscwebsite hacked - 2026

ஹேக்கர்களால் இந்திய அரசின் மூலம் நிர்வகிக்கப்பட்டு வரும் மத்தியப் பணியாளர் தேர்வாணைய இணைய தளம் திங்கள் கிழமை நேற்று முடக்கப்பட்டு, பின்னர் மீண்டது.

இந்திய குடிமைப் பணித் தேர்வுகள் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கான பணி இடங்களுக்கு, தேர்வுகள் நடத்தி பணியாளர்களைத் தேர்வு செய்கிறது யுபிஎஸ்சி. இதன் இணையதளம் (https://www.upsc.gov.in) நேற்று ஹாக்கர்களால் முடக்கப்பட்டது.

யுபிஎஸ்சி இணையதளத்துக்குச் சென்றபோது ஒரு டோரேமான் கார்ட்டூன் படத்துடன் “டோரேமொன்!!!!பிக் அப் தி கால்” என்ற காட்சி தெரிந்தது. இதனை சிலர் பிரதமர் அலுவலக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகார பூர்வ டுவிட்டர் பக்கத்தில் டுவிட் செய்தனர்.

இணையதளம் வழியாக யுபிஎஸ்சி 2018 தேர்வுகளுக்கான விண்ணப்பங்களைப் பெற நேற்றுதான் பணி தொடங்கப்பட்டது. இந்நிலையில், அதன் வெப்சைட் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் ஒருவாறு இந்த இணையதளம் சீர் அடைந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.