நடைபெற்று முடிந்த கர்நாடகா இடைத்தேர்தல் வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ், மஜத., கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். ஷிமோகா நாடாளுமன்றத் தொகுதியில் மட்டும் பாஜக., வெற்றி பெற்றது!
* பெல்லாரி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் சாந்தாவை விட 1 லட்சத்து 98 ஆயிரத்து 307 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பா வெற்றி! 2004-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பாஜக, பெல்லாரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று வந்தது.
* ஜமகண்டி சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் குல்கர்னி ஸ்ரீகாந்த் சுப்ராவை விட காங்கிரஸ் வேட்பாளர் நியமகவுடா 39 ஆயிரத்து 476 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
* ராம்நகர் சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் சந்திரசேகரை விட மதசார்பற்ற ஜனதாதள வேட்பாளர் அனிதா குமாரசாமி 1 லட்சத்து 246 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
* மாண்டியா மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளரை விட மதசார்பற்ற ஜனதாதள வேட்பாளர் சிவராமகவுடா 3 லட்சத்து 24ஆயிரத்து 377 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
* ஷிமோகா நாடாளுமன்ற தொகுதியில் ஜே.டி.எஸ் வேட்பாளர் மதுபங்காரப்பாவை விட பாஜக வேட்பாளரும், எடியூரப்பாவின் மகனுமான ராகவேந்திரா 47,388 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.